• விளையாட்டு

தமிழக மருமகன் ஆனார் பும்ரா: கோவாவில் நடந்த கோலாகல திருமணம்!

இந்திய கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா இன்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சி தொகுப்பாளர் சஞ்சனா கணேசனை மணந்து தமிழகத்தின் மருமகனானார்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளரான பும்ரா. தனிப்பட்ட காரணங்களால் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டுக்குப் பிறகு பும்ரா விடுப்பு எடுப்பதாக அறிவித்தார், மேலும் மார்ச் 12 முதல் தொடங்கிய டி-20 தொடரிலும் பும்ராவின் பெயர் காணப்படவில்லை. இதனால் பும்ராவின் திருமணம் காரணமாகத்தான் இந்த விடுப்பு என்று சொல்லப்பட்டது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றும் தமிழகத்தை பூர்விகமாக கொண்ட சஞ்சனா கணேசனை திருமணம் செய்துக்கொள்ளப் போகிறார் என்ற செய்தி பரவியது.

இந்நிலையில் பும்ராவுக்கும் சஞ்சனாவுக்கும் இன்று கோவாவில் திருமணம் முடிந்துள்ளது. பிங்க் நிற உடையில் மணமக்கள் அழகாக ஜொலிக்கின்றனர். மணமக்களுக்கு கிரிக்கெட் வீரர்கள் உடபட பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Comments

Maniam Ambi says :

Wishing you a very very Happy Married Life. God Bless

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :