• அரசியல்

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் மு.க.ஸ்டாலின்!

திமுக தலைவர் ஸ்டாலின் இன்று (மார்ச் 9) கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த 1-ம் தேதி முதல் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. இதில் 60 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்களும், அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் தடுப்பூசி போட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இதுகுறித்து ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் எழுதியுள்ளது:

“கொரோனா முதல் தடுப்பூசியை இன்று செலுத்திக்கொண்டேன். குறுகிய காலத்தில் சளைக்காத முயற்சிகளால் நமக்கு வெற்றிகரமாகத் தடுப்பூசியைக் கொடுத்த அறிவியல் சமுதாயத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. தொடர்ந்து நலத்தோடும் பாதுகாப்போடும் இருப்பதற்கான நடவடிக்கைகளை நாம் அனைவரும் மேற்கொள்வோம்”

-இவ்வாறு மு.க்.ஸ்டாலின் தன் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

twitter link : : https://twitter.com/mkstalin/status/1369181910467973122
Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :