• ஆரோக்கியம்

கோடைக்கு ஏற்ற இளநீர் பாயசம்!


நீலாயதாட்சி





கோடை காலத்தில் அடிக்கடி இளநீர் அருந்துவது உடலுக்கு நல்லது! அதையே ருசியான பாயசமாகச் செய்தால், ஒரு சொட்டுகூட செய்பவருக்கு மிச்சம் இருக்காது! அவ்வளவு டேஸ்ட் இளநீர் பாயசம்!

எப்படி செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

* கெட்டியான பால் - 1 1/2 கப்

* இளநீர் – 2.

* கெட்டியான தேங்காய் பால் - 1/2 கப்

* இளநீர் வழுக்கை - 1/2 கப்

* சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன்

* கண்டென்ஸ்டு மில்க் - 2 டேபிள் ஸ்பூன்

* ஏலக்காய் பொடி – சிறிதளவு!

செய்முறை:

முதலில் முக்கால் கப் இளநீரில், தேங்காய் வழுக்கைகளை கூழாக அரைத்து கொள்ளுங்கள். பின்னர் வாணலியில் பால், சர்க்கரை, கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து கெட்டியாக வருமளவில் காய்ச்சுங்கள்.

பின்னர் அதை குளிர வைத்து, அத்துடன் இளநீர் கூழ், தேங்காய் பால், ஏலக்காய் பொடி சேர்த்து கிளறினால் சுவையான இளநீர் பாயாசம் தயார். விரும்பினால் நெய்யில் முந்திரியை வறுத்து பாயசத்தில் சேர்க்கலாம். முக்கியமாக இந்த இளநீர் பாயாசம் செய்வதற்கு, இளநீரின் உள்ளே உள்ள வழுக்கையானது மென்மையாக இருக்க வேண்டும். கெட்டியாக தேங்காய் போன்று இருக்கக்கூடாது. அப்போதுதான் சுவை அலாதியாக இருக்கும்.




Comments

T.Bharathi says :

இளநீர் பாயசம் செய்முறை அருமை. வெயில் வருவதற்கு முன்னே வெயில் காலத்திற்கு ஏற்ற, வாசகர்களுக்கு ஆரோக்கியமான ரெசிப்பி வழங்கிய கல்கிக்கு நன்றி...

கேஆர்எஸ் சம்பத் says :

இளநீரை, சூடான பொருளோடு சேர்க்கலாமா ?....................

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :