• சினிமா – சின்னத்திரை

இசைஞானியின் புது ஸ்டூடியோவுக்கு வந்த ரஜினிகாந்த்!





சென்னை கோடம்பாக்கத்தில் புதியதாக இளையராஜா கட்டியிருக்கும் ஸ்டூடியோவுக்கு கடந்த 15ம் தேதி சென்று வந்த ரஜினி, அதற்கு அடுத்தநாளும் இரண்டாவது முறையாக ஸ்டூடியோவுக்கு வந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

சாலிகிராமம் பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்துடன் ஏற்பட்ட பிரச்னையால், அங்கியிருந்து வெளியேறினார் இளையராஜா. அதை தொடர்ந்து தி.நகர் மற்றும் கோடம்பாக்கம் பகுதிகள் இணையும் நுங்கம்பாக்கம் ஹை ரோடு பகுதியில் புதிய ஸ்டூடியோவை அவர் கட்டியுள்ளார். நவீன வசதிகள் மற்றும் புதிய கட்டமைப்புகளுடன் கூடிய ஹைடெக் ஸ்டூடியோவாக இது தயாராகியுள்ளது. இங்கு தற்போது திரைப்படங்களின் பாடல் பதிவுகள், பின்னணி இசைக்கோர்ப்பு பணிகள் உள்ளிட்டவை நடைபெற்று வருகின்றன

இந்நிலையில் நேற்று திடீரென ரஜினிகாந்த் இளையராஜாவின் புதிய ஸ்டூடியோவுக்கு வந்துள்ளார். அங்கு நடைபெற்று வந்த இசைப் பணிகளை பார்வையிட்ட அவர், இளையராஜா இசையமைத்து வரும் புதிய பாடல்களையும் கேட்டு மகிழ்ந்தார்.

இந்த ஸ்டூடியோ குறித்து கூறும்போது, ‘’இளையராஜா ஸ்டூடியோவை பார்த்து வியந்துவிட்டேன். ஒரு கோயிலுக்குள் வந்தது போன்ற உணர்வு எனக்குள் ஏற்பட்டது”” என பாராட்டியுள்ளார். மேலும் பல ஆண்டுகள் கழித்து இளையராஜாவுடன் மனம் திறந்து அவர் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 15ம் தேதி இளையராஜாவின் புதிய ஸ்டூடியோவுக்குள் முதன்முதலாக வந்த ரஜினி, கடந்த 16ம் தேதியும் மீண்டும் வந்துள்ளார். யாரிடமும் சொல்லாமல் சர்பரைஸாக வந்த ரஜினியை பார்த்து இளையராஜா மற்றும் மற்ற இசைக்கலைஞர்கள் அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். இனிமேல் அடிக்கடி இளையராஜா ஸ்டூடியோவுக்கு ரஜினிகாந்த் விசிட் அடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.




Comments

Yesudas says :

எத்தனையொ ஸ்டியோக்கள் வந்து போயாச்சு! இளையரசாவுக்கு இப்ப 20 வயசுன்னா, 70 வருசம் பலனை அனுபவிப்பார்! ரஜனி பாத்தாலும், ராசா வயசு கொறையவா போகுது? -- பாட்டி பட்டினத்தா

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :