• கலை

ஓவியங்களால் ஜொலிக்கும் ரயில்வே சுவர்!


சாந்தி கார்த்திகேயன்





சென்னை தரமணி வழியாக டைடல் பார்க் வரை செல்பவர்கள் அனைவரும் அடையாறு இந்திராநகர் ரயில்நிலையத்தின் சுவர் ஓவியங்களைக் கண்டு வியப்படைவார்கள்! அந்தளவு அற்புதமாக வரையப்பட்டுள்ளன இந்த ஓவியங்கள்.

சுவரோயங்கள் அனைத்தும் ரயில் பெட்டிகள் மாதிரியே வரிசையாக வரையப்பட்டுள்ளன. இவற்றை வரைந்து முடிக்க 40 நாட்கள் ஆனதாம்! எச்.ஐ.வி. பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளன இந்த ஓவியங்கள். இவற்றை வரைவதற்கான பணிகளை தென்னிந்திய ரயில்வே மற்றும் டைடல் பார்க் சார்பில் மேற்கொள்ளப் பட்டிருக்கிறது.

எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப் பட்டவர்களும் சமானிய சராசரி மனிதர்கள்தான் என்று உணர்த்தும் வகியில், ஒவியத்தின் ஒரு பாதியில் சாமானிய மனிதரின் முகமும் மற்ற பாதியில் எச்.ஐ.வி. நோயினால் பாதிக்கப்பட்டவரின் முகமும் காட்சியளிக்கும் வகையில் அருமையாக வரையப் பட்ட ஒரு ஓவியம் அனைவர் கருத்தையும் கண்ணையும் கவர்கிறது.




Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :