• அறிவியல்

`ஐ லவ் யூ அலெக்ஸா!


ஹரிஹரன்





உலகம் முழுவதும் விஞ்ஞான தொழில் நுட்ப வளர்ச்சியில், நாளுக்கு நாள் புதிய கண்டுபிடிப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. அதிலும் கொரோனா வைரஸூக்குப் பிறகு ஆன்லைன் வகுப்புகள், ஒர்க் ஃப்ரம் ஹோம் என்று கம்ப்யூட்டர் தொழில்நிட்பத்தின் தேவை அதிகரித்து விட்டது.

அந்த வகையில் அலெக்ஸா என்னும் ஸ்மார்ட் ஸ்பீக்கர், இந்தியா உட்பட பல நாடுகளில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது! கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அமேசான் அறிமுகம் செய்த இந்த அலெக்ஸாவிடம் எந்த கேள்வி கேட்டாலும் பதில் சொல்லும் என்பதுடன் நம் கட்டளைகளை நிறைவேற்றும் ரோபாட்கள் போன்றவை இவை என்பதால், இளைய தலைமுறையினர் மத்தியில் பிரபலம்.

அலெக்ஸாவைப் பயன்படுத்த செல்போனில் ஒரு பிரத்தியேக ஆப் இன்ஸ்டால் செய்து, வைஃபை மூலம் இணைத்து விட்டால் போதும். நாம் என்ன கேள்வி கேட்டாலும் பதில் சொல்லும். அறையின் எந்த மூலையில் இருந்தாலும், ‘’அலெக்ஸா` என அழைத்தால் போதும். அடுத்து நாம் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லத் தயாராகிவிடும். குறிப்பாக சிறுவர்களுக்கு மிகவும் பிடித்த ஸ்மார்ட் ஸ்பீக்கர் கருவியாக அலெக்ஸா இருக்கிறது.

சிறுவர்கள் விளையாடுவதற்கு, வீட்டுப் பாடங்கள் செய்ய, பாடல்கள் கேட்க, அலாரம் வைக்க எனப் பல்வேறு தேவைகளுக்கு அலெக்ஸா பயன்படுகிறது. பெரியவர்களைப் பொறுத்தவரை - ஆட்டோமேடிக்காக விளக்குகள் மற்றும் மின்னணு சாதனப் பொருள்களைக் கட்டுப்படுத்த பயன்படுத்துகிறார்களாம். அதாவது தங்கள் வீடுகளில் உள்ள ஸ்மார்ட் விளக்குகள், விசிறிகள், ஏ.சிக்கள், கேமராக்கள், ஏர் பியூரிஃபையர்கள், டி.வி.களை ஆன் செய்வதற்கும் அணைப்பதற்கும் அலெக்ஸாவுக்கு கட்டளையிட்டால் போதும். கச்சிதமாக செய்து முடிக்கும்.

இந்நிலையில், அமேசான் நிறுவனம் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியர்கள் நாள் ஒன்றுக்கு 19 ஆயிரம் முறை, ’’ஐ லவ் யூ அலெக்ஸா`’’ என சொல்கிறார்களாம். மேலும் இந்தியாவில் 2020-ம் ஆண்டை விட அலெக்ஸாவின் பயன்பாடு 67 சதவிகிதம் அதிகரித்துள்ளாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.




Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :