• இதர

பட்ஜெட் தாக்கல்: நிர்மலா சீதாராமனின் ‘சிம்பாலிக்’ புடவை!


சௌமித்ரி ஜகன்





இன்று பட்ஜெட் தாக்கல் செய்தபோது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அணிந்திருந்த புடவை கொஞம் ஸ்பெஷலானது! குறிப்பாக மேற்குவங்க ,மாநில மக்கள் கவனத்தை இந்த புடவை வெகுவாக ஈர்த்திருக்கும் என்பது நிச்சயம்! .

கைத்தறிப் புடவைகள் மீது அலாதி பிரியம் கொண்ட நிர்மலா சீதாராமன், இன்று ப்டஜெட் தாக்கல் செய்ய வந்தபோது சிகப்பும் வெள்ளையும் கொண்ட வர்ணத்திலான புடவையை அணிந்திருந்தார். இந்த புடவையை மேற்கு வங்கப் பெண்கள் முகூர்த்த நாட்களில் அணிவது வழக்கம். இது வங்காளத்தில் ‘லால் பாட்’ (laal paad) புடவை என்று அழைக்கப்படுகிறது.

குறிப்பாக மேற்கு வங்கத்தின் சிறப்பான நவராத்திரியின்போது துர்கா பூஜையன்று பெண்கள் இதே வகையான லால்-பாத் புடவை அணிந்துதான் துர்க்கையம்மனுக்கு பிரியாவிடை கொடுப்பார்கள்.

இந்தப் புடவையை அணிந்துவந்து பட்ஜெட் தாக்கல் செய்ததன் மூலம், நிர்மலா சீதாராமன் பண்பாட்டுக் குறியீடை சூசகமாக மேற்கு வங்க மக்களுக்குத் தெரிவித்துள்ளார்.

இப்படி மேற்கு வங்கத்தை தேர்தலுக்காக தன் புடவையின் மூலம் அம்மக்களின் மனங்களைக் கவர்ந்ததோடு மட்டும் நிற்கவில்லை.. பட்ஜெட் உரைத் தொடக்கத்திலேயே ரவீந்திரநாத் தாகூரின் கவிதையை மேற்கோள் காட்டித்தான் நிர்மலா சீத்தாரமன் பேசத் தொடங்கினார். “விடியல் இன்னும் இருளாக இருக்கும்போது, நம்பிக்கைப் பறவை ஒளியை உணருகிறது” என்ற பொருளில் வரும் கவிதை அது! ஆக,

ஆக, பட்ஜெட் தாக்கலுக்கு சிகப்பு - வெள்ளை நிறப் புடவையை மத்திய நிதியமைச்சர் அணிந்து வந்தது எதேச்சையானது அல்ல என்று அரசியல் விமரிசகர்களின் கருத்து!

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :