• சினிமா – சின்னத்திரை

கோவா 51-வது சர்வதேச திரைப்பட விழா!


ராஜ்மோகன் சுப்ரமணியன்

கொரோனா வைரஸ் உலகை புரட்டி போட்டதால் உலகின் பல இயக்கங்கள் சுமார் 9 மாதங்கள் முடங்கியது. தற்போது இயல்புநிலைக்கு திரும்பினாலும் பொதுமக்கள் பங்கேற்புடன் நிகழும் விழாக்களுக்கு கட்டுபாடுகள் தொடர்கின்றன . அந்த வகையில் -திரைப்பட விழாக்களும் பாதிக்கர் பட்டன.

உலக அளவில் நடைபெறும் பெர்லின், கான்ஸ், சண்டான்ஸ் போன்ற விழாக்கள் தள்ளிவைக்கபப்ட்டன. சில விழாக்கள் டிஜிட்டல் வடிவம் பூண்டுள்ளன. இவ்வழியில் இந்திய சர்வதேச திரைப்பட விழாவும் நவீன தொழில்நுட்பத்தில் நடக்கவுள்ளது. கோவா தலைநகர் பனாஜியில் நடைபெறும் இவ்விழா நாளை ( ஜனவரி 16 ) முதல் 24 -ம் தேதி வரை இரண்டு வடிவத்தில் நடக்கிறது.

ஒன்று நேரடியாக விழாக்களில் கலந்துகொண்டு கண்டுகளிக்கவும் இன்னொன்று வீட்டில் அமர்ந்தபடி ஓடிடி வழியாக பார்க்கவும் ஹைபிரிட் முறையில் நிகழ்வுள்ளது. இதன் மூலம் இதுவரை கோவா திரைப்பட விழாக்களை காண முடியாதவர்கள்கூட வீட்டில் இருந்தபடியே கண்டுகளிக்கலாம் .

டிஜிட்டலில் என்ன பார்க்கலாம்?

கோவா திரைப்பட விழாவின் தொடக்க விழா மற்றும் நிறைவு விழாவை அப்படியே நேரலையில் கண்டுகளிக்கலாம். அதே போன்று குறிப்பிட்ட சில படங்களையும் ஓடிடி மூலம் காண முடியும்.

‘மாஸ்டர்’ கிளாஸ் திரைப்பட விழாவின் ஹைலைட். அதை வீட்டில் இருந்து பார்க்க முடியுமா?

ஷேகர் கபூர் முதல் சுபாஷ் கய் வரை பெரும் ஆளுமைகளின் பயிற்சி வகுப்புகள் கோவாவில் நடைபெறும். நேரில் சென்றால் கூட அதிகபட்சம் ஒரு 2000 பேர் மட்டுமே பார்க்க முடியும். மற்றவர்களுக்கு அனுமதி கிடைக்காமல் ஏமாற்றம் தான் மிஞ்சும். இந்த முறை டிஜிட்டலில் நிகழ்வதால் இந்த நிகழ்ச்சிகள் முழுவதையும் வீட்டில் இருந்தே பார்க்கலாம். சினிமா கற்கலாம்.

சினிமா சந்தை - தொழில்நுட்பம் குறித்த விவாதங்கள் மிஸ் பண்ணுவோமா?

வழக்கம் போல் சினிமா தொழில்நுட்பம் குறித்து நடைபெறும் அனைத்து கருத்தரங்களும், கலந்தாய்வுகளும் நேரடியாக கோவாவில் நடைபெறும். அவற்றை வீட்டில் அமர்ந்தபடி பார்க்கமுடியும். அதனால் எதையும் மிஸ் பண்ண வருத்தம் இருக்காது. கோவாவில் இருந்தால் கூட குறிப்பிட்ட நிகழ்ச்சிகளை தான் பார்க்க நேரம் கிடைக்கும். பல நிகழ்ச்சிகள் மிஸ் ஆகும். இப்பொழுது நீங்கள் விரும்புவதை எல்லாம் வருத்திக்கொள்ளாமல் பார்க்கலாம்.

ஆனால் பயிற்சி வகுப்புகளில் எனக்கான சந்தேகங்களை கேட்க முடியுமா?

நேரடியாக கலந்துகொண்டால் என்னென்ன அனுபவங்கள் கிடைக்குமோ அவற்றையெல்லாம் டிஜிட்டல் பார்வையாளர்களுக்கும் வழங்குகிறது திரைப்பட விழாக்குழு. டிஜிட்டல் பார்வையாளர்களுக்கு என்று பிரத்யோக கேள்வி நேரம் உண்டு. அதன் அடிப்படையில் விரும்பும் கேள்விகளை நீங்கள் எழுப்பி தெளிவு பெறலாம்.

வீட்டில் இருந்தபடியே திரைப்பட விழாவை கண்டுகளிக்க திரைப்பட விழாவின் பிரத்யோக வளைத்தளமான www.iffigoa.comல் பதிவு செய்துகொள்ளலாம். மீடியா பதிவுக்கு கட்டணம் கிடையாது.

சர்வதேச திரைப்பட விழாக்கள் நடைபெறும் அதே நேரத்தில் பிலிம் பசார் எனும் சினிமா சந்தையை நிகழ்த்தும் தேசிய திரைப்பட வளர்ச்சி நிறுவனமும் ( National Film Development Corporation). இம்முறை டிஜிட்டல் அவதாரம் பூண்டுள்ளது. என் எப் டிசியின் சினிமா சந்தையில் நிகழும் கருத்தரங்கங்கள் ,திரைப்பட படைப்பாளிகள் மற்றும் தயாரிப்பாளர் சந்திப்பு, புதிய படங்கள் அறிமுக சந்தை, கதை ஐடியாக்கள் அறிமுக கூட்டம், திரைப்பட வர்த்தக மையங்கள் கருத்தரங்கம். மாநிலங்கள் திரைப்பட எடுக்க தரும் உதவிகள் சார்ந்த கண்காட்சிகள் என அனைத்தையும் இப்பொழுது டிஜிட்டலில் கொண்டு வருகிறது என் எப் டி சி. இதுசார்ந்த தகவல்களை www.filmbazaarindia.com என்ற வலைதளத்தில் பெறலாம்.

சினிமா பிரியர்களுக்கு புத்தாண்டின் தொடக்கமே பெரும் கொண்டாட்டமாக ஆரம்பிக்கிறது. இறுக்கத்தை தொலைத்து இனிய திரைப்பட விழாக்களை காண்போம்.
Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :