• இதர

அமெரிக்க பாடத்தில் வனமனிதர் ஜாதவ் வரலாறு!


சுபஸ்தினி, சென்னை.





இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த ஜாதவ் பயேங் என்பவரின் வாழ்க்கை வரலாறு அமெரிக்க பாடபுத்தகத்தில் இடம் பெற்று சாதனை படைத்துள்ளது.

அஸ்ஸாமைச் சேர்ந்த 57 வயது ஜாதவ், கிழக்கு அஸ்ஸாமில் மஜூலி தீவில் தரிசாகக் கிடந்த 550 ஹெக்டேர் பரப்பளவில் 1979-லிருந்து தனிமனிதனாக மரங்களை நடத் தொடங்கி, தற்போது அப்பகுதியை ஒரு அடர்ந்த காடாக உருவாக்கியிருக்கிறார். அந்த வகையில் அவர் ’Forest man of India’ என்று அழைக்கப்படுகிறார் இவரது வாழ்க்கை வரலாறு தற்போது அமெரிக்க பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

பகுதியில் மஜூலித் தீவின் சுற்றுச்சூழல் கெடுவதை கண்டு சிறுவயது முதலே கவலைகொண்ட ஜாதவ் பயேங், 1079-லிருந்து மரங்களை நடத்தொடங்கினார். தனது 40 ஆண்டு கால உழைப்பினால் அங்கு தரிசாகக் கிடந்த 550 ஹெக்டர் நிலப்பரப்பில் அடர்ந்த காட்டை உருவாக்கியுள்ளார். இதில் தற்போது யானை, காண்டாமிருகம், புலி என பல விலங்கினங்களும் வசிக்கத் தொடங்கியுள்ளன.

விவசாயி ஜாதவ் பயேங் சாதனையை சிறப்பிக்கும் வகையில் இந்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ பட்டமும், கர்மயோகி விருதும் வழங்கி கவுரவித்துள்ளது.

ஜாதவின் சாதனைகளை வருங்காலத் தலைமுறையினருக்கு அறிமுகப் படுத்தும் வகையில், அமெரிக்காவின் பிரிஸ்டெல் கனெக்டிகட் பள்ளிகளின் பாடத்திட்டத்தில் ஜாதவ் பயேங்கின் வாழ்க்கை வரலாறு பாடமாக சேர்க்கப்பட்டுள்ளது.

தரிசாகக் கிடந்த 550 ஹெக்டேர் நிலத்தை வனவிலங்குகள் வந்து வசிக்கும் அடர்த்தியான காடாக தனியொரு மனிதர் உருவாக்கியிருப்பது சாதாரணமான விஷயமல்ல..எங்கள் மாணவர்கள் சுற்றுசூழலியல் பாடத்தின் ஒரு பகுதியாக ஜாதவின் வாழ்க்கை வரலாற்றைப் படிப்பது மிகவும் பொருத்தமான ஒன்று! ஒரு தனிமனிதன் மேற்கொள்ளக்கூடிய ஆக்கபூர்வமான முயற்சி, நாளடைவில் மிகப் பெரிய நல்லவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்கு ஜாதவ் சிறந்த எடுத்துக்காட்டு. அதனால்தான் அவரைப் பற்றி அமெரிக்க பாடத்தில் சேர்க்கப்பட்டுள்ளது” என்கிறார் அமெரிக்கப் பள்ளியொன்றில் பணியாற்றும் இந்திய வம்சாவளி ஆசிரியரான நவோமி சர்மா!




Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :