• வாழ்வியல்

இயற்கை விவசாயம் செய்கிறார் தோனி!


கட்டுரை: ஷைனி





இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி, கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தபின் இப்போது முழுநேர விவசாயியாக மாறியுள்ளார்.

ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சியில் உள்ள தனது பண்ணை வீட்டில் 10 ஏக்கர் விவசாய நிலத்தில் அவர் இயற்கை முறைப்படி பப்பாளி, வாழை ஆகியவற்றை பயிரிட்டு வருகிறார். மேலும், இயற்கை முறையில் பயிரிட்ட காய்கறிகளான தக்காளி, முட்டைகோஸ், பீன்ஸ் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளை துபாய்க்கு ஏற்றுமதி செய்வதற்காக ஜார்கண்ட் அரசிடம் கோரிக்கை வைத்தார்.

அம்மாநில அரசும் தோனியின் கோரிக்கையை ஏற்று துபாய்க்கு காய்கறிகளை ஏற்றுமதி செய்ய முன்வந்துள்ளது. மேலும் தங்களது வேளாண்மை துறை மூலம் இதற்கான நடவடிக்கைகளை விரைவாக எடுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

தோனி தன் பண்ணியில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள், பழங்களை துபாய்க்கு ஏன் ஏற்றுமதி செய்ய விரும்புகிறார் என்று பலரும் கேள்வி எழுப்பினர். இதற்கு தோனி அளித்த பதில்..

ஜார்கண்ட் மாநிலத்தில் தொழில் தொடங்க எந்த உலக நிறுவனங்களும் முன் வருவதில்லை. இப்போது என் பண்ணையில் இயற்கை முறை விவசாயத்டின் மூலம் விளைவிக்கப்படும் காய்கறிகள், பழங்களை வெளீநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் உலக நாடுகளின் கவனம் ஜார்கண்ட் மாநிலம் பக்கம் திரும்பும். உலகின் பல்வேறு நிறுவனக்களூம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் தொழில் தொடங்க முன்வருவார்கள். இந்த காரணத்துக்காகதான் என் பண்ணைக் காய்கறிகளை ஏற்றுமதி செய்ய விரும்புகிறேன்.

-இவ்வாறு தோனி தெரிவித்துள்ளார்.

இந்த விவசாயத்தின் மூலம் வரும் விளைச்சலைப் பொறுத்து, அடுத்ததாக இயற்கை முறையில் தயாரான உரங்கள் விற்பனையையும் தோனி தொடங்கப் போகிறாராம்.

கிரிக்கெட்டில் உலக சாதனை செய்தது மாதிரி, விவசாய்ததிலும் தூள் கிளப்புங்க தல தோனி!




Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :