• சமையல்

முட்டையில்லாத குக்கர் கேக்!


சாந்தி கார்த்திகேயன்





கிறிஸ்துமஸ் அன்று வீட்டிலேயே கேக் செய்து தரச் சொல்லி குழந்தைகள் ஒரே ரகளை! ஆனால், வயதான மாமியார் ‘’இன்று வைகுண்ட ஏகாதசி! அதனால் முட்டையெல்லாம் சேர்க்காமல் என்ன வேணாலும் பண்ணு’’ என்று கறாராக சொல்லிவிட்டார். வேறு என்ன செய்வது?! முட்டையில்லாத கேக் செய்வது எப்படி என்று யூடியூப் பார்த்து கற்று, அடுத்த அரைமணியில் அருமையான கேக்கை குக்கரிலேயே செய்து முடித்தேன். கமகம வாசத்தால் குழந்தைகளுக்கு முந்தி மாமியார் போட்டி போட்டுகொண்டு கேக்கை ருசித்தார் என்றால் பார்த்து கொள்ளுங்கள். இதோ.. நியூஇயர் தினத்தன்று நீங்களும் செய்து பாருங்களேன்..

.

தேவையான பொருட்கள் :

கோகோபவுடர்:3மேஜைக்கரண்டி

மைதா:ஒன்றேகால்கப்

பேக்கிங்பவுடர்:ஒன்றரைமேஜைக்கரண்டி

கண்டன்ஸ்ட்பால்:3/4கப்

வெண்ணெய்:4மேஜைக்கரண்டி

வனிலாஎஸன்ஸ்:1சொட்டு

உப்பு:1/2மேஜைக்கரண்டி

பொடித்தசர்க்கரை:1கப்

உருக்கியவெண்ணெய்:1/2டீஸ்பூன்

மைதா - 1 டீஸ்பூன் (பாத்திரத்தினுள் தூவ)

செய்முறை :

ஒரு அகலமான பத்திரத்தில் மைதா, பேக்கிங் பவுடர், பொடித்த சர்க்கரை, கோகோ பவுடர் ஆகிய அனைத்தையும் சேர்த்து கலந்து, சல்லடையில் கட்டியில்லாமல் மிருதுவாக சலித்து கொள்ளவும். பின் அத்துடன் வெண்ணெய், மற்றும் கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கலக்கவும். அத்துடன் வனிலா எசென்ஸ் சேர்த்து மிக்ஸ் பண்ணி கொள்ளுங்கள். ஒருவேளை கேக் மாவு ரொம்பவும் கட்டியாக இருந்தால் சிறிது பால் சேர்த்து கொள்ளலாம்.

பின்னர் கனமான அலுமினிய பாத்திரத்தின் உட்புறத்தில் ஒரு ஸ்பூன் உருக்கிய வெண்ணெய் அல்லது எண்ணெயை நன்கு பூசுங்கள். பின்னர் அதன் மேல் சிறிதளவு மைதா மாவை தூவி வைக்கவும். அப்போதுதான் கேக் பாத்திரத்தில் ஒட்டாமல் வரும். அல்லது பட்டர் பேப்பரை பாத்திரத்தினுள் போட்டு அதன் மீது வெண்ணெய் தடவியும் வைக்கலாம். நாம் தயாரித்து வைத்துள்ள கேக் கலவையை இந்த பாத்திரத்தில் மெதுவாக ஊற்றவும். பத்திரத்தின் பாதி அளவுதான் மாவை ஊற்ற வேண்டும், அப்போதுதான் கேக் எழும்பி வரும்.

இப்போது குக்கரை 10 நிமிடம் சூடுபடுத்தி அதனுள் கல் உப்பு அல்லது மணலை போட்டு சூடுபடுத்தவும். இது ந்ன்கு சூடானதும் குக்கரினுள் ஒரு ஸ்டாண்டு பொருத்தி அதன் மேல் கேக் பாத்திரத்தை வைத்து மூடவும். விசில் போட கூடாது. குக்கர் மூடியில் கேஸ்கட் போடாமல் மூடவும். விசில் போட கூடாது. அடுப்பை மெதுவான தணலில் வைத்து 30 நிமிடம் கேக் வேக விடவும். பின்னர் குக்கரை திறந்து ஒரு கத்தி அல்லது மெல்லிய குச்சியால் கேக்கினுள் குத்தி பார்த்தால், மாவு அதில் ஒட்டியிருக்கக் கூடாது. அப்போதுதான் கேக் சரியான பதத்தில் வெந்தாக அர்த்தம்! ஒருவேளை சரியாக வேக வில்லையென்றால், மீண்டும் 10 நிமிடம் அடுப்பை சிம்மில் வைத்து பின்னர் அணைத்து விடவும். குக்கர் சூடு ஆறியதும் திறந்து கேக் பாத்திரத்தை வெளியில் எடுத்துவிடலாம்.

பாத்திரத்தின் உட்புறம் ஒரு கத்தியால் சுற்றி கீறிவிட்டு, பின்னர் ஒரு பிளேட்டில் பாத்திரத்தை தலைகீழாகக் கவிழ்த்து தட்டினால், கேக் அழகாக விழும். சுவையான சாக்லேட் கேக் ரெடி! விரும்பினால், கேக்கின் மேல் அரிசி மிட்டாய், ஜெம்ஸ் போன்றவற்ரைப் பதித்து அலங்காரம் செய்யலாம். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.




Comments

bhamathinarayanan says :

how did this post get published in this place while the menpena process is not working..

கேஆர்எஸ் சம்பத். says :

கமெண்ட்ஸ் மென்பேனா வழியாக வருவதில்லை. KOL காத்திருக்கச் சொல்லும் வரை காத்திருப்போம் .

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :