• இதர

எனக்கும் சென்னை சொந்த ஊர்! - ஜோ பிடன்!


பிரசாந்த் கார்த்திக்





அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பிடன் தனது முன்னோர்கள் இந்தியாவில் வசித்தார்கள் என்று முன்னர் பேட்டியில் சொல்லியிருந்தது இப்போது வைரலாகி வருகிறது.

சமீபத்தில் மிகவும் பரபரப்பாக நடந்து முடிந்துள்ள அமெரிக்க தேர்தலில் ஜனநாயக கட்சி வெற்றிபெற்று அதிபராக ஜோ பிடனும், துணை அதிபராக கமலா ஹாரிஸூம் வெற்றி பெற்றுள்ளனர். இதில், கமலா ஹாரீஸின் பூர்வீகம் தமிழகத்தில் மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் என்பதால் அவர் வெற்றி பெற வேண்டுமென துளசேந்திரபுரத்தில் சிறப்பு பூஜைகள் கூட நடத்தப்பட்டன.

இந்நிலையில் ஜோ பிடனின் முன்னோர்களும் இந்தியாவில் வசித்தவர்கள் என்ற தக்வல் வெளியாகி, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஜோ பிடன் 972ல் செனட் உறுப்பினராக பதவியேற்றபோது அவரை வாழ்த்தி, இந்தியாவிலிருந்து அவருக்கு ஒரு கடிதம் கிடைத்துள்ளது. அக்கடிதத்தை எழுதியவரின் பெயரும் பிடன் என்ற அவர்களது குடும்ப பெயரிலேயே முடிந்திருந்தது. மேலும் அக்கடிதத்தில், ஜோ பிடனின் முன்னோரும் தம் குடும்பத்து முன்னோரும் ஒருவரே என்று தெரிவித்திருந்தார். முந்தைய காலத்தில் பிடன் குடும்பத்தை சேர்ந்த ஒருவர் கிழக்கிந்திய கம்பெனி மூலமாக இந்தியா வந்தடைந்து, இங்கேயே செட்டில் ஆனதாகவும் அவரே தம் இரு குடும்பத்தின் முன்னோர் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

சில வருடங்கள் கழித்து இது குறித்து ஒரு விழாவில் பேசிய ஜோ பிடன் “எனது மூதாதையர்களில் ஒருவரான ஜார்ஜ் பிடன், ஒரு காலத்தில் கிழக்கிந்திய கம்பெனி கேப்டனாக செயல்பட்டு இந்தியா வந்தடைந்து அங்கேயே வாழ்ந்ததாக தெரிவித்துள்ளார். ஆனால் ஜார்ஜ் பிடன் என்ற பெயரில் கிழக்கிந்திய கம்பெனியில் யாரும் இருந்ததற்கான ஆதாரம் கிடைக்கவில்லையாம்.

அதே சமயம் க்ரிஸ்டோபர் பிடன் என்னும் வெள்ளையர் ஒருவர் பிரிட்டிஷ் இந்தியா காலத்தில் சென்னைக்கு வந்து, இங்கேயே வாழ்ந்து இறந்ததற்கான நினைவு சின்னம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜோ பிடனின் முன்னோர்கள் பற்றிய சம்பவங்கள் இப்போது வைரலாகி வருகிறது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :