• விளையாட்டு

ஒலிம்பிக்ஸில் மேரிகோம் அதிர்ச்சித் தோல்வி! பாரபட்சத் தீர்ப்பு என கொந்தளிப்பு!





டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியின் நாக் அவுட் சுற்றில், இந்திய வீராங்கனை மேரிகோம் அதிர்ச்சி தோல்வியடைந்தார். இவரின் தோல்விக்கு நடுவர் தீர்ப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் தெரிவிக்கப்படுகின்றன. இன்று காலிறுதிக்கு முந்தைய சுற்றில் கொலம்பியாவின் இன்க்ரிட் வாலன்சியாவுடன் மேரிகோம் மோதினார். இதில் மூன்று சுற்றுகல் போராடியதில், புள்ளிக்கணக்கில் வாலென்சியா வெற்றி பெற, மேரிகோம் அதிர்ச்சி தோல்வியுற்றார்.

இந்நிலையில்,இப்போட்டி நடக்கத் துவங்கும் கடைசி நேரத்தில் ஒலிம்பிக் கமிட்டி அதிகாரிகள் தனது ஜெர்சியை மாற்ற சொன்னது ஏன் என்று மேரி கோம் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவு:

என்னுடைய ஜெர்சியில் (விளையாட்டு வீரர்களில் உடை) முதல் பெயர் மட்டுமே இடம்பெற வேண்டும் என்று கடைசி நிமிடத்தில் அதிகாரிகள் மாற்றினர். ஆனால், இதற்குமுன் நான் ஆடிய போது என் முழு பெயரும் ஜெர்சியில் இருந்தது. அப்போது ஏன் என்னுடைய ஜெர்சியை மாற்ற சொல்லவில்லை.? நாக்-அவுட் சுற்று தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன், ஜெர்சியை மாற்றுமாறு ஒலிம்பிக் கமிட்டியினர் கூறியதற்கான காரணத்தை ஒலிம்பிக் கமிட்டியினர் விளக்க வேண்டும்.

-இவ்வாறு மேரி கோம் தன் டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். மேலும் ஒலிம்பிக்கில் நடுவர்களின் நியாயமற்ற தீர்ப்பால்தான் தான் தோல்வியுற்றதாக மேரிகோம் தெரிவித்துள்லார். மேலும், ஒலிம்பிக்ஸ் தூதர் என்ற தன் பொறுப்பையும் ராஜினாமா செய்யப் போவதாக மேரிகோம் அறிவித்துள்ளார்.

இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த உலக மகளிர் குத்துச்சண்டை போட்டிகளில் தொடர்ச்சியாக 5 முறை தங்கப்பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத் தக்கது. 38 வயதான் மேரிகோம், இரு குழந்தைகளுக்கு தாய் ஆவார். இவர் 2012 லண்டன் கோடை கால ஒலிம்பிக் போட்டியில், 51 கிலோ எடைப் பிரிவில் போட்டியிட்டு வெண்கலப் பதக்கத்தை வென்றார். மேரிகோம் அர்ஜுனா விருது, பத்ம ஸ்ரீ விருது, ராஜுவ்காந்தி கேல் ரத்னா உள்ளிட்ட விருதுகளை பெற்றவர் ஆவார்.




Comments

கே.ஆர். உதயகுமார் says :

பதக்கம் எதுவும் வெல்லாததே மிகப் பெரும் சோகமே!

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :