• இதர

“செல்போன் இல்லாத காதல் எங்களுடையது” கூகுள் தலைமை அதிகாரி சுந்தர் பிச்சை!


கட்டுரை: சாந்தி கார்த்திகேயன்





’’நாங்க காலேஜ் படிக்கறப்போ செல்போன்லாம் ஏது? லேண்ட்லைன் டெலிபோன் தான் ஒரே கதி..’’ – சொல்லிச் சிரிக்கிறார், கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை. கல்லூரியில் படிக்கும்போது தன் மனைவி அஞ்சலியுடன் மலர்ந்த காதல் கதையை சுவாரஸ்யமாக விவரிக்கிறார்..

சுந்தர் பிச்சையின் மனைவி அஞ்சலி ராஜஸ்தானைச் சேர்ந்தவர். அங்கு பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கரக்பூர் ஐஐடியில் பி.டெக் இன்ஜினியரிங் சேர்ந்துள்ளார். அதே கல்லூரியில் அதே வகுப்பில் சகதோழராக அறிமுகமானவர்தான் சுந்தர் பிச்சை. தன் வகுப்பு தோழியாக முதன்முதலில் அஞ்சலியை பார்த்ததுமே சுந்தர் பிச்சை காதலில் விழுந்திருக்கிறார்.

‘’ஆனால் அஞ்சலி முதலில் தன் காதலை என்னிடம் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. ஆரம்பத்தில் நண்பர்களாக மட்டுமே பழகினோம். நாளடைவில் அவரு என்னை விரும்பியதை அறிந்து, நாந்தான் முதலில் பிரபோஸ் செய்தேன்”’ என்கிறார் சுந்தர் பிச்சை.

ஆனால், படிப்புக்கே முன்னுரிமை என்று இருவரும் தீர்மானித்ததால், ஐஐடி படிப்பு முடிந்ததும் சுந்தர் பிச்சை மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றுவிட, அஞ்சலி சொந்த ஊர் திரும்பி, ஒரு நிறுவனத்தில் வேலை கிடைத்து பிசியாகி உள்ளார்.

’’அபோதெல்லாம் செல்போன் வசதி இல்லை! கிட்டதட்ட ஆறு மாதங்கள் நாங்கள் இருவரும் பேசிக்கொள்ளவே இல்லை! அதன்பின் எப்போதாவது மூன்று மாதத்துக்கு ஒருமுறை என்றரீதியில் லேண்ட்லைன் தொலைபேசியில் பேசுவோம். அதுவும் சில நிமிடங்கள்தான்! ஆனால் அதெல்லாம் ஒரு பிரச்சினையாக தெரியவைல்லை! பொருளாதார ரீதியாக எங்களை பலப்படுத்திக் கொண்டபின்னரே திருமணம் என்பதில் உறுதியாக இருந்தோம்’’ – சுந்தர் பிச்சை சொல்வதை ஆமோதிப்பது போல சிரிக்கிறார் அவரது மனைவி அஞ்சலி.

நினைத்தது போலவே, இருவரும் தொழில்ரீதியாக தங்களை மெருகேற்றிக் கொண்டு இருதரப்பு பெற்றோரும் சம்மதிக்க, சுந்தர் பிச்சை, அஞ்சலி ஜோடியின் திருமணம் இந்திய முறைப்படி இனிதே நடந்திருக்கிறது. திருமணத்துக்குப் பின் அஞ்சலி அமெரிக்காவில் கணவருடன் செட்டிலானார்.

இப்போது இவர்களுக்கு காவியா, கிரண் என்று அழகான இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.




Comments

கே. ஆர். எஸ். சம்பத் says :

வாவ்.. ஸ்வாரஸ்யமான செய்தி. மகிழ்ச்சி !! வாழ்த்துக்கள் (through KOL)

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :