• விளையாட்டு

யூரோ 2020 கால்பந்து போட்டி: பாராசூட் மூலம் மைதானத்தில் குதித்த மர்ம நபர்!


சுமதி தேவராஜன்

`யூரோ 2020 கால்பந்து போட்டி இப்போது பரபரப்பாக நடந்து வருகிறது. நேற்று (ஜூன் 15) மியூனிக்கில் பிரான்ஸ்-ஜெர்மனி அணிகளுக்கிடையேயான பிரிவு எஃப் கால்பந்து போட்டி பரபரப்பாக நடந்தது. அப்போது சர்வதேச சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கமான கிரீன்பீஸ் அமைப்பைச் சேர்ந்த ஒரு நபர் திடீரென்று மைதானத்துக்கு மேலாக பாரசூட்டில் பறந்தார். அந்த பாரசூட்டில் `Kick out oil Greenpeace` என்ற வாசகம் எழுதப் பட்டிருந்து.

சற்றுநேரம் மைதானத்துக்கு மேலாக அங்குமிங்கும் பறந்தவர், பின்னர் மைதானத்தில் பாராசூட் மூலம் குதித்தார், கால்பந்து போட்டியை ரசிக்க வந்த ரசிகர்களிடையே இதனால் பதற்றம் ஏற்பட்டது. அந்நபரை உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.

அவர் மைதானத்தின் மேல் பறந்தத போது ஓவர்ஹெட் கேமரா ஒயரில் பாராசூட் சிக்கியதால், அதன் பாகங்கள் ரசிகர்கள் மீது உடைந்து விழுந்தன. இதனால் பலர் காயமுற்றனர். பிரான்ஸ் பயிற்சியாளர் டீஷாம்ப் , ரசிகர்களின் தலைக்கு வெகு அருகில் பாராசூட் பறநக்க, அவர் தரையோடு தரையாக குனிந்து தப்பினார். .

அதுசரி.. இந்த கால்பந்து போட்டிக்கும் கிரீன்பீஸ் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் என்ன சம்பந்தம்?!

இந்த கால்பந்து தொடரின் ஸ்பான்சர்களில் ரஷ்யாவின் அரசு எரிசக்தி நிறுவனமான கேஸ்புரோம் நிறுவனமும் ஒன்றாகும். இந்த நிறுவனம் ஏற்கெனவே கிரீன்பீஸ் இயக்க எதிர்ப்புக்கு ஆளாகியுள்ளது.

மேலும் பெட்ரோல் மற்றும் டீசல் கார்களை தயாரிக்கும் வோல்க்ஸ்வேகன் நிறுவனத்துக்கு எதிராகவும் இந்த பாராசூட் போராட்டக்காரர் மைதானத்தில் பாரசூட் மூலம் நுழைந்ததாக கிரீன்பீஸ் இயக்கத்தின் ஜெர்மன் டிவிட்டர் கணக்கு கூறுகிறது.

இந்த களேபரத்துக்கு நடுவில் நடந்த கால்பந்து போட்டியில், மேட்ஸ் ஹம்மெல்சில் ஓன் கோலால் ஜெர்மனி தோற்றது. பிரான்ஸ் 1-0 என்ற கணக்கில் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

Twitter : : https://twitter.com/i/status/1404876755685552131

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :