• சினிமா – சின்னத்திரை

மரோசரித்ரா மாதிரி இந்த படமும் சூப்பர்ஹிட் ஆகும் : பிரேம கதந்டா பட இயக்குனர்!


- ராகவ் குமார்





கோவிட் ஊரடங்கால் தமிழ் நாட்டில் தியேட்டர்கள் கூட்டமின்றி, மூடப்படும் சூழலில், நமது அண்டை மாநிலமான ஆந்திராவில் புதிது, புதிதாக திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன.தெலுங்கு சினிமா என்றாலே கலர் கலரான ஆடைகள், வண்ண பொடிகள், லாஜிக் இல்லாத சண்டை காட்சிகள்தான் நினைவுக்கு வரும்.

ஆனால் தற்சமயம் தெலுங்கு சினிமா மாறி வருகிறது.மென்மையான காதலை சொல்லும் திரைபடங்களை தெலுங்கு ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள். பிரேம கதந்டா என்ற தெலுங்கு படத்தின் இரண்டு போஸ்டர்கள் தற்போது வெளியாகி உள்ளது. அல்லு சிரிஷ் அனு இம்மானுவேல் நடித்துள்ள இப்படத்தின் போஸ்டர், பல்வேறு பார்வையாளர்களை கவர்ந்தந்துள்ளது.

ஒரு போஸ்டரில் காதலின் ஆழத்தை சொல்லும் மிரர் போட்டோவும், இன்னொரு போஸ்டரில் காதலின் அன்பை சொல்லும் நெற்றியில் முத்தமிடும் காட்சியும் இடம் பெற்றுள்ளது. பார்த்தாலே இளைஞர்கள் மனதில் பரவசத்தை ஏற்படுத்துகிறது இப்படத்தின் போஸ்டர்கள்,

இந்த படம் திரைக்கு வரும்போது மரோசரித்ரா மாதிரி மிக பெரிய வெற்றிப் படமாக அமையும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் படத்தின் டைரக்டர்.




Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :