• விளையாட்டு

ஒரே பந்தில் 286 ரன்கள்! எப்போ நடந்த கிரிக்கெட் மேட்ச் ?!


அதுல் ஸ்ரீநிவாஸ்

வழக்கமான கிரிக்கெட்் போட்டிகளில், ஒரு பந்து வீச்சுக்கு அதிகபட்சம் 6 ரன்கள் எடுத்து பார்த்திிருப்போம் அதுவே நோ - பால் என்றால் கூடுதலாக. இன்னொரு ரன் சேரும். ஆனால், ஒரு கிரிக்கெட் மேட்ச்சில்் ஒரேயொரு பந்தில் 286 ரன்கள் எடுக்கப்பட்டது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா..?

ஆமாம் 1894-ம் ஆண்டு நடந்த ஒரு கிரிக்கெட் போட்டியில், ஒரு பந்துக்கு பேட்டிங் செய்த இரு வீரர்களும் 286 ரன்களை ஓடியே எடுத்துள்ளனர்.

1894-ம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதி மேற்கு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் விக்டோரியா ஸ்காரட்ச் XI அணிக்கும் ஆஸ்திரேலியா அணிக்கு உள்ளூர் போட்டி நடைபெற்றுள்ளது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய விக்டோரியா அணி, தான் எதிர்கொண்ட முதல்பந்தை தூக்கி அடித்துள்ளது. அந்த பந்து மைதானத்திலிருந்த மரத்தின் கிளைகளில் வசமாக சிக்கி கொண்டது.

பந்து மரத்தில் சிக்கியதை தொடர்ந்து தொடக்க வீரர்கள் ரன் ஓடி கொண்டு இருந்துள்ளனர். பந்தை இழந்து விட்டதாக அறிவிக்குமாறு பந்துவீச்சாளர் நடுவரிடம் வலியுறுத்தி உள்ளார். பந்து கண்களுக்கு தெரிந்தால், ரன் எடுக்கலாம் என்று அப்போதைய விதிமுறை நடைமுறையில் இருந்தது. இத்னால், பந்தை இழந்து விட்டதாக நடுவர்கள் அறிவிக்க மறுத்து விட்டனர்.

மரத்தில் சிக்கிய பந்தை பல வழிகளில் எடுக்க முயற்சித்துள்ளனர். இறுதியாக துப்பாக்கியால் குறிவைத்து பந்தை சுட்டுள்ளனர்.

இதற்கு இடையில் தொடக்க வீரர்கள் ரன் எடுத்து கொண்டே இருந்துள்ளனர். ஒரு வழியாக பந்து மரத்தில் இருந்து கீழே விழுந்துள்ளது. அதனை யாரும் கேட்ச் செய்யவில்லை. அதற்குள் தொடக்க வீரர்கள் 286 ரன்களை ஓடியே எடுத்ததாக அறிவித்துள்ளனர். 286 ரன்கள் எடுக்க கிட்டத்தட்ட பேட்ஸ்மேன்கள் 6 கி.மீ ஓடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments

G.Ravindran says :

Hilarious ! Just wondering if only someone had caught the ball as it fell from the tree, 286 runs would have been reduced to zero. !! The batsmen of course could still have been satisfied with their 6 km running exercise....

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :