• விளையாட்டு

கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி.. ஜூலையில் தொடங்குது ஆஸ்திரேலிய போட்டிகள்!

கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்துபடைக்கும் 2021ம் ஆண்டுக்கான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கிரிக்கெட் தொடர் பெரியளவில் நடக்கவில்லை. டி20 உலகக்கோப்பை போட்டியும் தற்சமயம் ரத்தாகி உள்ளது.

இந்நிலையில் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் வரைக்கும் மெகா கிரிக்கெட் போட்டி பிளான்களை அறிவித்துள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்.

ஆஸ்திரேலிய அணி அடுத்ததாக ஜூலை 10ம் தேதி முதல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 5 டெஸ்ட், 5 டி20, 3 ஒருநாள் தொடர்களில் ஆடவுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த போட்டி ஜூலை 21 வரை நடக்கிறது.

இதன் பிறகு அக்டோபரில் டி20 உலகக்கோப்பை நடைபெறவுள்ளது. அனைத்து நாட்டு கிரிக்கெட் அணிகளும் உலகக்கோப்பையை மனதில் கொண்டு தொடர்களை அறிவித்து வரும் நிலையில் ஆஸ்திரேலிய ஒருபடி மேல் சென்று உலகக்கோப்பைக்கு பின்னர் நடக்கும் திட்டங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி நவம்பர் 27ம் தேதி ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்த போட்டி ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியாவில் நடைபெறவுள்ளது.

இதன் பிறகு கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் இங்கிலாந்து - ஆஸ்திரேலிய ஆஷஸ் தொடர் நடைபெறவுள்ளது. வரும் டிசம்பர் மாதம் 8ம் தேதி ஆஸ்திரேலியாவின் காபாவில் தொடர் 2022ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி பெர்த் மைதானத்தில் நிறைவடைகிறது.

முதல் டெஸ்ட் - டிசம் 8 - 12

2வது டெஸ்ட் - டிசம் 16 - 20

3வது டெஸ்ட் - டிசம் 26 - 30

4வது டெஸ்ட் - ஜன 5 - 9

5வது டெஸ்ட் - ஜன 14 - 18

ஆஷஸ் தொடர் முடிவடைந்த பின்னர் ஆஸ்திரேலியாவுக்கு நியூசிலாந்து அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயும் ஜனவரி 30ம் தேதி முதல் பிப்ரவரி 5ம் தேதி வரை 3 ஒருநாள் போட்டி தொடரும், பிப்.8ம் தேதி ஒரே ஒரு டி20 கிரிக்கெட் தொடரும் நடைபெறவுள்ளது.

இதனை முடித்த கையுடன் இலங்கை அணிக்கு எதிரான தொடரை நடத்துகிறது ஆஸ்திரேலிய அணி. இரு அணிகளுக்கு இடையேயும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவுள்ளது. பிப்ரவரி 11ம் தேதி சிட்னியில் தொடங்கும் இந்த போட்டி முதல் பிப்.20ம் தேதி மெல்பேர்னில் முடிவடைகிறது.

அனைத்து அணிகளும் தற்போதுதான் டி20 உலகக்கோப்பை வரையிலான திட்டங்களை தீட்டி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. ஆனால் ஆஸ்திரேலிய அணியோ அடுத்தாண்டின் தொடக்கத்தை அதிரடியாக தொடங்க வேண்டும் என முன்கூட்டியே மெகா ப்ளானை போட்டுள்ளது. இது மற்ற நாட்டு அணிகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :