• அரசியல்

எல்லோராலும் எம்.ஜி.ஆர் ஆக முடியாது!


கட்டுரை : ஜாசன் ( மூத்த பத்திரிகையாளர்).





தமிழகத்தில் சமீபத்தில்நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அனைத்துக் கட்சித் தலைவர்களாலும் தொடர்ந்து பேசப்பட்ட ஒரே தலைவர் எம்ஜிஆர் தான். எம்ஜிஆர் மறைந்து 34 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால்் இன்றும் தமிழக அரசியலின் தவிர்க்க முடியாத தலைவராகவே அவர் இருக்கிறார்

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் நடிகருமான கமலஹாசன் நான் எம்ஜிஆர் மடியில் அமர்ந்து வளர்ந்தவன் என்றார். ரஜினி கூட கட்சி துவங்குவதற்கு முன் நான் எம்ஜிஆர் ஆட்சியை தருவேன் என்றார். ரஜனி ஆதரவாளரான தமிழருவி மணியன் கூட இதையே வலியுறுத்தினார். அதிமுக மட்டுமல்லாமல், திமுக-வும் எம்.ஜி.ஆரை முன்னிறுத்தி தேர்தல் பிரசாரம் செய்தனர்.

எம்ஜிஆருக்கு பிறகு அரசியலில் நிறைய திரைப்பட நட்சத்திரங்கள் ஆர்வமுடன் வந்தனர் எல்லோருமே நாமும் எம்ஜிஆர் தான் என்ற கனவுடன் தான் வந்தார்கள் என்பதுதான் உண்மை பாக்கியராஜ் நான்தான் எம்ஜிஆரின் கலை உலக வாரிசு அரசியல் உலக வாரிசு கூட என்றார். விஜயகாந்த்தும் கருப்பு எம்ஜிஆர் என்றுதான் அழைக்கப்பட்டார். பாக்கியராஜ் இப்போது அரசியலில் இருக்கிறாரா இல்லையா என்பதே தெரியவில்லை விஜயகாந்த் எதிர்க் கட்சித் தலைவரானார் ஆனால் இப்போது அவர் கட்சியின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது. எம்ஜிஆர் ஆட்சியை தருவேன் என்று சொன்ன ரஜினி அரசியல் வேண்டாம் என்று ஒதுங்கி விட்டார். கமலஹாசன் எம்ஜிஆர் பற்றி பேசினார் எங்கள் கட்சியின் முக்கிய கொள்கை" நாளை நமதே"அது எம்ஜிஆர் நடித்த படம் என்று மறக்காமல் சொன்னார். இன்று அவரது கட்சி காலி பெருங்காய டப்பா ஆகிவிட்டது. அமிதாபச்சன் ஹேமமாலினி தர்மேந்திரா போன்ற நட்சத்திர பிரபலங்கள் கூட அரசியலில் சோபிக்கவில்லை.

என்டி ராமராவ் எம்ஜிஆரின் ஆலோசனை பேரில் எம்ஜிஆரின் ஆசியுடன் தான் கட்சியை தொடங்கினார் அவர் உயிருடன் இருக்கும் வரை எம்ஜிஆர் பேச்சைக்கேட்டு தான் ஆட்சி நடத்தினார் என்று கூட சொல்லலாம்.

தமிழக அரசியல் வரலாற்றில் இன்றுவரை பெருமையாக பேசப்படுவது 2 முதல்வர்கள் ஆட்சிதான்! அது காமராஜர் ஆட்சி மற்றும் எம்ஜிஆர் ஆட்சி. இந்த தேர்தலில் கூட திமுக நல்லாட்சி தருவோம் என்றுதான் சொன்னதே தவிர, கலைஞர் ஆட்சி அமைப்போம் என்றெல்லாம் சொல்லவில்லை. காமராஜரை காங்கிரஸ் கட்சி மறந்துவிட்டது

ஆனால் எம்ஜிஆர் ஆட்சி இன்றும் பேசப்படுகிறது இதற்கு காரணம் எம்ஜிஆர் தான். எம்ஜிஆர் மூன்று முறை முதல்வரானார். அவர்தான் நல்லாட்சி தர முடியும் என்று தமிழக மக்கள் நம்பினார்கள் அதுதான் உண்மை. அவர் ஆட்சியில் அதிகாரம் பரவலாக்கப்பட்டது அவர் மக்கள் தொட்டுவிடும் தூரத்தில் தான் இருந்தார் எம்ஜிஆரை யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் சந்தித்து பேசலாம். கருத்து சுதந்திரத்தை அவர் மதித்தார். விமர்சனங்களை அவர் வரவேற்றார் தவறுகள் சுட்டிக் காட்டபட்டபோது அவர் அது திருத்திக் கொள்ள தயங்கியதில்லை. இதற்கு காரணம் - நம்மை நம்பி ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார்கள் அந்த மக்களுக்கு நாம் துரோகம் செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் எம்ஜிஆர்.

?ஜெயலலிதா கூட தேர்தல் சமயத்தில் எம்ஜிஆரை புகழ்ந்து பேசி தான் வாக்கு கேட்டார் எம்ஜிஆர், இரட்டை இலை இரண்டும் தமிழ்நாட்டில் இன்றுவரை தவிர்க்க முடியாத ஒரு சக்தியாகதான் இருக்கிறது.

இந்த தேர்தலில் கூட அதிமுகவினர் எம்ஜிஆர் ஆட்சி அமைப்போம் என்று சொல்லியிருந்தால் அவர்கள் ஒருவேளை ஆட்சியைப் பிடித்திருக்க கூடும். அவர்கள் ஜெயலலிதா ஆட்சியை அமைப்போம் என்று பிரச்சாரம் செய்தார்கள்.

இப்போதைய அதிமுகவில் எம்ஜிஆருடன் இருந்து எம்ஜிஆரை நன்கு தெரிந்தவர்கள் என்று பட்டியலிட்டால் மதுசூதனன் சைதை துரைசாமி செங்கோட்டையன் பொன்னையன் என்று விரல்விட்டு எண்ணிவிட முடியும் அவ்வளவுதான்.

எம்ஜிஆரின் வாரிசு என்று எம்ஜிஆர் யாரையும் அறிமுகப்படுத்தவில்லை ஜெயலலிதா தானாகவே நான்தான் எம்ஜிஆர் வாரிசு என்று சொல்லிக்கொண்டார் எம்ஜிஆருடன் படங்களில் நடித்தவர் இரட்டை இலை சின்னம் எம்ஜிஆர் தொடங்கிய அதிமுக என்பதெல்லாம் அவருக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தித் தந்தது அதனால் அவர் ஆட்சியை பிடித்தார். ஆனால் அவரும் அதன்பிறகு எம்ஜிஆரை மறந்து போனார்.

எம்ஜிஆர் கட்சி தொடங்கிய போது நடிகர் நாடாள லாமா என்று முதலில் கேட்டது திமுக தான். எம்ஜிஆர் முகத்தை காட்டினாலே 3 லட்சம் ஓட்டு கிடைக்கும் என்று திமுகவை தொடங்கிய அண்ணா புகழ்ந்து சொன்னார் ஆனால் கருணாநிதி "நடிகர் நாடாள முடியுமா?" என்று கேட்டார் எம்ஜிஆர் ரசிகர்களை விசிலடிச்சான் குஞ்சுகள் என்று வர்ணித்தார் கருணாநிதி. ஆனால் இந்த விமர்சனங்களுக்கு எல்லாம் எம்ஜிஆர் பதில் சொல்லவில்லை நடிகரால் நாடாள முடியும் என்பதை தனது செயல் மூலம் நிரூபித்தார். அதன் பிறகு அந்தக் கேள்வியே காணாமல் போனது. எம்ஜிஆர் என்பது மகத்தான மாயாஜால சக்தி ஆனால் அது மக்கள் நமக்கு தந்த சக்தி என்றுதான் எம்ஜிஆர் நினைத்தாரே தவிர இவையெல்லாம் தன்னால்தான் என்று தன்னை அவர் என்றுமே கொண்டாடி கொண்டது கிடையாது. அதனால் தான் நான்தான் அடுத்த எம்ஜிஆர் என்று எல்லோரும் போட்டி போட்டார்கள் ஆனால் மக்கள் அதை நம்பவில்லை. எம்ஜிஆரின் மனைவி ஜானகி அம்மா கூட தமிழக மக்களால் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டவர்தான்.

தமிழக மக்களைப் பொறுத்தவரை எம்ஜிஆர் யாருடனும் ஒப்பிட முடியாத உச்சத்தை தொட்டவர். எம்ஜிஆர் தொடங்கிய சத்துணவு திட்டம் தான் இன்று பல மாநிலங்களுக்கு முன்னோடி. எம்ஜிஆர் திமுகவில் இருந்தபோது அவரது ரசிகர்கள் திமுகவை எம்ஜிஆர் கட்சி என்றுதான் சொன்னார்கள் ஒரு முறை ஒரு எம்ஜிஆர் ரசிகர் அண்ணாவிடம் அண்ணா காரில் இருந்த திமுக கொடியை காட்டி "நீங்கள் எம்ஜிஆர் கட்சியா?" என்று கேட்டார் அதற்கு அண்ணா "ஆமாம் நான் எம்ஜிஆர் கட்சி தான்" என்றார் அண்ணாதான் திமுகவை தொடங்கியவர் ஆனால் இதை பெருமையாக எழுதினார்.. சொன்னார் அண்ணா. அதுதான் எம்ஜிஆர் மேஜிக் .

எம்ஜிஆர் ` எங்கள் வீட்டுப் பிள்ளை` என்று மக்கள் கொண்டாடினர். அதேசமயம் அரசியலில் சிறுசேமிப்பு துணைத்தலைவர், மேலவை உறுப்பினர் / சட்டமன்ற உறுப்பினர்`, கட்சி பொருளாளர் என்று - இப்படி பல படிகளை தாண்டி தான் முன்னேறினார் அது எம்ஜிஆர் வாரிசு என்று சொல்கிற நடிகர்கள் பலருக்கு தெரியவில்லை.

எம்.ஜி.ஆரின் முழு சித்தாந்தத்தை உணராமல், நடிகர் என்ற ஒரே தகுதியை மட்டும் வைத்து கொண்டு தமிழக அரசியலில் வெல்ல முடியாது என்பதை இந்த சட்டமன்றத் தேர்தல் உணர்த்திவிட்டது. சினிமாவில் இருந்து வரும் எல்லோரும் எம்ஜிஆர் அல்ல என்பதுதான் மக்களின் தீர்ப்பு என்பதற்கு இந்தத் தேர்தலும் ஒரு உதாரணம்

Comments

B.BALAJEE. says :

Very good and very Perfect. M.G.R. Kadavul in marru vadivum.

B.BALAJEE. says :

Very good and very Perfect. M.G.R. Kadavul in marru vadivum.

B.BALAJEE. says :

Very good and very Perfect. M.G.R. Kadavul in marru vadivum.

Anbalagan says :

M.G.R He is a potential person to face all problems of him and the people ..He also gave positive solutions to it. Very good .Congrats

K s Balaji says :

தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தி எம் ஜி ஆர்.

Dayalan k says :

yes 100% true, another MGR never come again...

TIRUVARANGA VENKATESAN says :

நாணல் போலே வளைப்பது தான் சட்டமாகுமா? அதை வளைப்பதற்கு வழக்கறிஞர் பட்டம் வேண்டுமா? நான் ஒரு கை‌ பார்க்கிறேன்! பூனையல்ல! புலியென்று போகப்போக காட்டுகிறேன். மறக்க முடியுமா எம்ஜிஆரின் பாடல் வரிகளை?

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :