• அறிவியல்

3-ம் உலகப் போருக்கு சீனா தயாரித்த பயோ- கருவி?


கட்டுரை : சங்கரராமன்

மூன்றாம் உலகப் போர் ஏற்படுமானால், அதற்கு பயன்படுத்தக்கூடியவை உயிரி ஆயுதமாகவே இருக்கக் கூடும் என்று பல நாடுகள் அஞ்சி வந்தன.

இந்நிலையில் 3-ம் உலகப் போருக்காக சீனா ராணுவம் தயாரித்த உயிரி ஆயுதம் கொரோனா வைரஸ் என்றும், அதுகுறித்து 2015-ம் ஆண்டே அந்நாட்டு விஞ்ஞானிகள் விவாதித்ததாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது வரைக்கும் உலக நாடுகளை உலுக்கி வருகிறது.

கொரோனா முதல் அலையில் அமெரிக்கா. பிரிட்டன் . ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. கொரோனா 2-ம் அனலயில் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. கொேரானா பரவல் காரணமாக உலகம் பொருளாதாரமே சீர்குலைந்துள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் முதன் முதலில் சீனாவிலிருந்து எப்படி பரவியது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. சீன ஆய்வகத்தில் இருந்து கொரோனா வைரஸ் பரவியதாகவும், அது சீன விஞ்ஞானிகள் செயற்கையாக தயாரித்தது எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால் அதனை சீனா மறுத்தது.

மேலும், சமீபத்தில் வுகான் நகரில் ஆய்வு நடத்திய உலக சுகாதார நிறுவனமும், கொரோனா வைரஸ் செயற்கையாக உருவாக்கப் பட்டதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என மறுத்தது

இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவுவதற்கு 5 ஆண்டுகளுக்கு முன்பே இதுபோன்ற ஒரு உயிரி ஆயுதத்தை தயாரிக்க சீன ராணுவம் திட்டமிட்டதாக, அமெரிக்க வௌியுறவுத்துறையின் புலனாய்வு பிரிவுக்கு சில ரகசிய ஆவணங்கள் கிடைத்திருப்பதாக, ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அதன்படி, 2015-ம் ஆண்டே சீன ராணுவத்தின் விஞ்ஞானிகள் மற்றும் பொது சுகாதார நிபுணர்கள் இணைந்து, சார்ஸ் கொரோனா என்ற வைரசை உருவாக்கும் திட்டம் குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது. தேவைப்படும்போது இந்த வைரசை உயிரி ஆயுதமாக பயன்படுத்த திட்டமிட்டதாகவும், 3-ம் உலகப் போர் ஏற்பட்டால், தம்மை எதிர்க்கும் நாடுகள் மீது அவற்றை பயன்படுத்த சீனா திட்டமிட்டதாகவும் தெரிகிறது

எதிர்காலத்தில் உலக நாடுகள் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கும், குற்றம் சாட்டினால் மறுக்கும் அளவுக்கும் இருக்க வேண்டும் எனவும், சீன ராணுவம் உத்தரவிட்டுள்ளதாக ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கு கிடைத்த இந்த ரகசிய ஆவணங்களால் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது..
Comments

s.kumarselvam says :

என்னக் கொடுமை இது?

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :