• இதர

ஸ்மார்ட் எல்பிஜி சிலிண்டர்கள்: அறிமுகம் செய்தது இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்!


ஹரிஹரராம சுப்பிரமணியன்





இந்தியன் ஆயில் தனது வாடிக்கையாளர்களுக்கு எடை குறைவான ஸ்மாட் சிலிண்டர்களை அறிமுகப் படுத்தியுள்ளது.

இந்த சிலிண்டர்கள் நவீன ரக மாடுலர் சமையலறைகளில் பொருத்தும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால், எந்த வகை சமையலறைக்கும் பொருந்தக் கூடியது. இந்த ஸ்மார்ட் சிலிண்டரின் சிறப்புகளாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வெளியிட்டுள்ள தகவல்கள்:

வண்ணமயமாக ஃபைபரால் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் சிலிண்டர்களில் எந்தளவு எரிவாயு உள்ளது, எவ்வளவு செலவிடப்பட்டுள்ளது என்பதை வாடிக்கையாளர்கள் அறிந்து கொள்ள முடியும். நவீன மாட்யூலர் சமையலறைக்கு பொருத்தமாக இருக்கக் கூடியவை.

- இவ்வாறு அந்நிறுவனம் தன் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளது..

இந்த புதியவகை ஸ்மார்ட் எல்பிஜி சிலிண்டர்கள் தற்போது ஹைதராபாத் மற்றும் டெல்லியில் கிடைக்கிறது. வரும் காலங்களில் இது மற்ற இடங்களிலும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது பற்றிய மேலும் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள இண்டேன் விநியோகஸ்தரை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

5 மற்றும் 10 கிலோ எடையில் இந்த சிலிண்டர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.இப்போது உள்ள இரும்பு சிலிண்டர்களை விட சுமார் 50 % எடை குறைவு. அதே சமயம் இலகுவாக இருக்கும். அதேசமயம் தற்போது வீடுகளில் பயன்படுத்தும் இரும்பு சிலிண்டர்களில் சுமார் 14 கிலோ எரிவாயு உள்ளது. இந்த ஸ்மார்ட் சிலிண்டர்களில் அதிகபட்சம் 10 கிலோ எரிவாயு நிரப்பப் பட்டிருக்கும்.

- இவ்வாறு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் குறிப்பிட்டுள்ளது.

twitter link : : https://twitter.com/IndianOilcl/status/1389897671825969153

Comments

M.Radhakrishnan says :

Reduced capacity?---frequently we have to order for LPG? Not a sound solution , I suppose

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :