• சமையல்

வெயிலுக்கு உகந்தது; உடம்புக்கு நல்லது!


- தனுஜா ஜெயராமன்





வெயில் கால மதிய நேரங்களில் அரிசி உணவுகளை அதிகம் சாப்பிட முடிவதில்லை. அதனால் அரிசி சாதம் மீந்து போனால் கவலைப்பட வேண்டியதில்லை. மதியமே இரண்டு கைப்பிடி கேழ்வரவு மாவை தண்ணீரில் திக்காகக் கரைத்து வைத்து விட வேண்டும். அது இரவுக்குள் புளித்து விடும்.

இரவு நேரத்தில் அந்த மீந்த சாதத்தில் மூன்று டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். ஏற்கெனவே வெந்த சாதமாகையால் விரைவில் குழைந்து விடும். பிறகு, புளிக்க வைத்த கேழ்வரகு மாவு கலவையை சிறிது சிறிதாக விட்டு கை படாமல், கட்டிகளில்லாமல் கிளறி, தட்டு போட்டு மூடி வைத்து, 15 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து விடலாம்.

மறுநாள் காலையில் ஒரு கிண்ணத்தில் தேவையான அளவு கூழ் கலவையை எடுத்து கல் உப்பு சேர்த்துக் கரைத்து சிறிய மண் பாண்டங்களில் ஊற்றி வைத்துக் கொள்ளலாம். சுட்டெரிக்கும் வெயிலில் இதனை சில்லென்று குடிக்க வயிற்றுக்கு இதமாகவும் பதமாகவும் சுவையாகவும் இருக்கும்.

கூடவே, உரித்த சின்ன வெங்காயம், மற்றும் காரம் போட்டு உப்பில் ஊறிய மாங்காய் துண்டுகள், துவையல்கள், ஊறுகாய் தொட்டுகொண்டு இந்த கூழைக் குடிக்க, வெயிலுக்கு தேவாமிர்தமாக இருக்கும். ராகி கூழ் உடலுக்கு நல்ல வலுவையும் குளிர்ச்சியையும் தரவல்லது.




Comments

கதிர் says :

எதுவாக இருந்தாலும் அவரவர்கள் வீட்டிலேயே செய்து, சமைத்து சாப்பிட வேண்டும். சுகாதாரம் மிகவும் முக்கியம்

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :