• இதர

டெடி பியர் உடையில் 644 கி.மீ. நடை பயணம்: அமெரிக்க நபரின் சாதனை!





அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நபர் டெடி பியர் உடை அணிந்துகொண்டு 644 கி.மீ நடந்தே சென்று ஒரு தொண்டு நிறுவனத்துக்கு நிதி சேகரித்து வருவது அனைவரையும் கவர்ந்து வருகிறது.

ஜெஸ்ஸீ லாரியோஸ் என்ற 33 வயதான நபர் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து சான் ஃபிரான்சிஸ்கோ வரை சுமார் 644 கி.மீ தூரம்வரை நடந்தே சென்று நிதி திரட்டி வருகிறார். ஒரு தொண்டு நிறுவனத்திற்காக அவர் தற்போது வரை 7,100 டாலர்கள் நிதி திரட்டியுள்ளார்.

ஆனால் அவர் சாதாரணமாக நடக்கவில்லை. டெடி பியர் உடையை அணிந்து கொண்டு நடக்கிறார். மேலும் அந்த கதாபாத்திரத்துக்கு பியர்சன் எனவும் பெயர் வைத்துள்ளார்.

இது சம்பந்தமாக எதையும் திட்டமிட்டு செய்யவில்லை. திடீரென தோன்றிய ஐடியாதான் என்று சொல்லும் ஜெஸ்ஸீ, ஏப்ரல் 12-ம் தேதி, பயணத்தைத் தொடங்கிய நிலையில், சில நாட்களிலேயே ஏராளமான ரசிகர்கள் அவருக்குக் கிடைத்துள்ளனர்.

தற்போதுவரை 7,100 டாலர்களை நிதி கிடைத்துள்ளதாம். ஆனால் என்ன காரணத்துக்காக இப்படி நிதி சேகரிக்கிறார் என்பது குறித்து, சான் ஃபிரான்சிஸ்கோ சென்ரடைந்த பிறகுதான் வெளியிடுவாராம்.






Comments

M.Kothandapani says :

ஐயா டெடி பியர் மனிதரே.... எங்க ஊர் வெய்யிலில் கொஞ்ச தூரம் நடந்து பாருங்க.... அந்த ஆசையே உங்களுக்கு அத்து போயிடும்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :