• ஆன்மிகம்

உறவுகளை பலப்படுத்தும் ஸ்ரீராம நவமி வழிபாடு!


- எம்.கோதண்டபாணி





ஸ்ரீ மகாவிஷ்ணுவின் தசாவதாரங்களில் மிகவும் மேன்மை மிக்கது ஸ்ரீராமாவதாரம். ஸ்ரீராமபிரான் அவதரித்த புனித நாள் இன்று. இதையே அனைவரும் ஸ்ரீராமநவமி என்று போற்றி, விரதமிருந்து வழிபடுகிறோம்.

ஸ்ரீராம பக்தர்கள், பத்து நாட்களுக்கு முன்பே ராமாயணக் காவியத்தைப் படிக்க ஆரம்பித்து, ஸ்ரீராம நவமியன்று முடித்து, சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் படைத்து வழிபடுவர். இன்று ஸ்ரீராமர் கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படும். இந்த பூஜையில் கலந்துகொள்ள முடியாதவர்கள், வீட்டு பூஜையறையில் பட்டாபிஷேக ஸ்ரீராமர் படத்தை வைத்து, துளசியால் அலங்கரித்து பூஜை செய்யலாம். மேலும் பழம், வெற்றிலை, பூ போன்றவற்றால் ஸ்ரீராம நாமத்தைச் சொல்லி அர்ச்சனை செய்தால் பல்வேறு நன்மைகள் உண்டாகும். இன்று ராமாயணம் கதாகாலட்சேபம் கேட்பது, ராமாயணம் படிப்பது மிகவும் சிறந்தது.

ஸ்ரீராமபிரான் காட்டில் விசுவாமித்திரரோடு வாழ்ந்த சமயத்தில், தாகத்துக்காக நீர்மோரும், பானகமும் அருந்தினர். அதனால் இன்று நீர்மோரும், பானகமும் ஸ்ரீராமருக்கு நிவேதனமாகப் படைக்கப்படுகிறது. ஸ்ரீராமருக்கு பூஜை செய்த பிறகே நிவேதனப் பொருட்களை மற்றவர்க்கு உண்ணக் கொடுக்க வேண்டும். ஸ்ரீராம நவமியன்று காலை முதல் விரதமிருந்து ஸ்ரீராமபிரானை வணங்கி வழிபடுபவர்களுக்கு ஸ்ரீ ஆஞ்சனேயரின் அருள் பூரணமாகக் கிடைக்கும். இந்த வழிபாட்டால் குடும்பத்தை விட்டுப் பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேர்வர். கணவன், மனைவி உறவு பலப்படும். சகோதர உறவு மேம்படும். ஸ்ரீராம நவமி தினமான இன்று,

‘ஸ்ரீ ராம ராம ராமேதி

ரமே ராமே மனோ ரமே

சஹஸ்ர நாம தத்துல்யம்

ராம நாம வரானனே’

எனும் மந்திரத்தை உச்சரித்து ஸ்ரீராமனை வழிபட, அனைத்து நலன்களும் கைகூடும். ‘ராம’ என்ற இரண்டெழுத்து மந்திரம் ஆணவம், காமம், பேராசை ஆகியவற்றை அழிந்து, வாழ்வில் அன்பையும், அறிவையும் பெருகச் செய்யும்.

Comments

Jayanti Sundar Rajan says :

Very nice ! Jai Sri Ram !!

G.Ravindran says :

Obeisance to `Maryada Prushottam` Ram

Bhamathynarayanan says :

வழிபாடுகள் உறவுகளை பலப்படுத்தும் ...ஆனால் இந்தக் கண்ணுக்குத்இ. தெரியாத. இந்தச் சிறியக் கிருமி கொரோனா உறவுகளை அண்ட விடாமல் உடைத் தெறிகிறதே..... நல்லுள்ளங்களை வருத்துகிறதே...ஜெய் ஸ்ரீராம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :