• ஆரோக்கியம்

புறப்பட்டது ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்!


சுபஸ்தினி





இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக தேவைப்படும் ஆக்சிஜன் எரிவாயு விநியோகத்துக்காக சிறப்பு சரக்கு ரயில்கள் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளன. இந்த சிறப்பு ரயில் சேவை நேற்று (ஏப்ரல்19) இரவு தொடங்கப்பட்டுள்ளது.

நாட்டின் இந்த முதலாவது ஆக்ஸிஜன் ரயில் மும்பையின் கலாம்போலி ரயில் நிலையத்திலிருந்து விசாகப்பட்டினத்துக்கு புறப்பட்டது. அந்த கூட்ஸ் வண்டியிலுள்ள காலி கன்டெய்னர்களீல் ஆக்ஸிஜன் நிரப்பப்பட்டு மீண்டும் மும்பைக்கு கொண்டு வரப்படுகிறது.

இந்த சிறப்பு ரயிலின் ஒவ்வொரு கம்பார்ட்மென்ட் கன்டெய்னரிலும் 16 மெட்ரிக் டன் அளவுக்கு ஆக்சிஜன் நிரப்பப்பட்டு கொண்டு வரப்படும் என்றும், ஏழு பெட்டிகள் அந்த ரயிலில் இடம்பெறும்," என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதுமுள்ள கொரோனா நோயாளிகளின் ஆக்ஸிஜன் தேவையைக் கணக்கில் கொண்டு, இதுபோல மேலும் சில ரயில்களை இயக்க ரயில்வே அமைச்சகம் தீர்மானித்துள்ளது.

இந்தியா முழுவதும் சுமார் 20 லட்சத்துக்கும் அதிகமான கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள். இதுவரை சுமார் ஒரு லட்சத்து 78 ஆயிரம் பேர் அந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழந்திருக்கிறார்கள்.

கொனோனா 2-வது அலை தாக்கம் இந்தியாவில் அதிகரித்திருப்பதால், மருத்துவமனைகளில் போதுமான மருத்துவ வசதிகள் வழங்க முடியாத நிலையில் உள்ளன. குறிப்பாக, கொரோனா பாதிப்பு கார்ணமாக மூச்சுத் திணறல் தீவிரமாக உள்ளவர்களுக்கு ஆக்சிஜன் அவசிய தேவையாகும்.

ஆக்ஸிஜன் தட்டுப்பாடு காரணமாக நோயாளிகள் உயிரிழக்கவும் காரணமாகிறது.

இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் மாநிலங்கள் வரிசையில் மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், குஜராத், உத்தர பிரதேசம், டெல்லி, சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான் ஆகியவை முன்னிலை வகிக்கின்றன.

இந்திய அளவில் தற்போது ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகரித்திருப்பதால், 50 ஆயிரம் மெட்ரிக் டன் அளவுக்கு ஆக்சிஜனை இறக்குமதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் நாட்டின் ஒன்பது தொழிற்துறைகளில் தொழிற்துறை பயன்பாட்டுக்கு ஆக்சிஜன் பயன்படுத்தப்படுவதை நிறுத்தி வைக்கவும் உத்தரவிட்டுள்ளது. இந்த கட்டுப்பாடு மறுஉத்தரவு வரை தொடரும் என்று அரசு அறிவித்துள்ளது. இதேவேளை, கூடுதலாக ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை திறக்க நிதிவசதி செய்து தரவும் அரசு முன்வந்துள்ளது.

இந்தியாவில் மருத்துவ தேவைக்கான ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு உள்ளது என்பதை விட, அது தேவைப்படும் இடங்களுக்கு கொண்டு செல்லப்படுவதில் நிலவும் விநியோக தடங்கலே அதிகம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

அந்த வகையில் சிறப்பு சரக்கு ரயில் சேவைகள் நேற்று முதல் செயல்படத் தொடங்கியுள்ளன. இந்த ரயில்கள் மூலம் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை அவற்றை தயாரிக்கும் நிறுவனங்களிலிருந்து பெற்று தேவையான இடங்களுக்கு அனுப்புவது எளிதாகும். அதனால் மத்திய அரசின் இந்த முயற்சி பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

twitter link : : https://twitter.com/PiyushGoyal/status/1384163049678856202

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :