• விளையாட்டு

அடுத்த ஐபிஎல் போட்டியில் தோனி விளையாட தடை?

தற்போது நடந்து வரும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொண்ட காரணத்தினால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் தோனி அடுத்துவரும் 2 முதல் 4 ஐபிஎல் போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் கொரோனா தொற்று காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி பல கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. ஐபிஎல் போட்டியில் 20 ஓவர் கொண்ட ஒரு இன்னிங்சை 90 நிமிடங்களில் முடிக்க வேண்டும் என்பது விதி. ஒரு மணிநேரத்தில் 14 ஓவர்கள் பந்து வீசினால் தான் குறிப்பிட்ட நேரத்திற்குள் இன்னிங்ஸ் முடிவடையும்.

இந்நிலையில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி பந்து வீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டது என குற்றம்சாட்டப்பட்டது. இதற்காக அணித் தலைவர் மகேந்திர சிங் தோனிக்கு 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொண்ட காரணத்தினால் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி அடுத்து வரும் 2 முதல் 4 போட்டிகளில் விளையாட கிரிக்கெட் போர்டு தடைவித்துள்ளது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :