• இதர

பெரியார் சாலை பெயர் மாற்ற சர்ச்சை: தமிழக நெடுஞ்சாலை ஆணையம் விளக்கம்!

சென்னை ஈவேரா பெரியார் சாலை பெயர் மாற்றம் செய்யப்பட்டதாக வெளியான சர்ச்சைக்கு தமிழக நெடுஞ்சாலை ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

சென்னையில் முத்துசாமி பாலத்தில் தொடங்கி மதுரவாயல் சந்திப்பு வரை தொடரும் 14 கிமீ நீளமுள்ள பிரதான சாலை பூத்தமல்லி ஹை ரோடு என்றும், பெரியார் ஈ.வே.ரா சாலை என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. சென்னையின் முக்கிய பிரதான சாலையான இந்த சாலையின் பெயர் தற்போது மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி பெரியார் ஈ.வே.ரா சாலை Grand Western Trunk Road என்று பெயர் மாற்றப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் தமிழக நெடுஞ்சாலை ஆணையம் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது. அதில் தெரிவிக்கப் பட்டதாவது:

பெரியார் ஈவேரா சாலை பெயர் மாற்றப்படவில்லை சென்னை மாநகராட்சி தரவுகளின்படி அந்த சாலை பெரியார் பெயரில் அழைக்கப்பட்டாலும், பிரிட்டிஷ் காலத்திலிருந்தே ஆவணங்களில் Grand Western Trunk Road என்றேதான் உள்ளது. அதனால், அரசின் அதிகாரபூர்வ ஆவணங்களில் இன்றும் அதே பெயரில் தொடர்கிறது. மற்றபடி பெயர்மாற்றம் செய்யப்படவில்லை.

-இவ்வாறு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Comments

R BALA says :

ஆவணங்களில் பல. வருடங்களுக்கு பதிவானதை இப்ப தேடி க் கண்டு. பிடிச்சு ....ஊதிப்பெருக்கி விளக்கம் ச நேரத்தை வீணடிக்கணுமா தேடிக் கண்டு பிடித்து அவசரமா முக்கியமா முடிக்க வேண்டிய வேலைகள் .நிறைய இருக்கே

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :