• விளையாட்டு

2011-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டி: நினைவு கூர்ந்த சச்சின்!

2011-ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றிபெற்று கோப்பையைத் தட்டி சென்றது. 10 ஆண்டுகள் நிறைவேறீய நிலையில், அப்போட்டியில் பங்கேற்ற இந்திய அணி வீரர்களுக்கு சச்சின் டெண்டுலகர் நினைவுகூர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட சச்சின் டெண்டுல்கர் கடந்த மார்ச் 28ம் தேதி சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட செய்தி:

நான் மருத்துவர்களின் ஆலோசனையின் கீழ் முன்னெச்சரிக்கை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். விரைவில் குணமடைந்து வீடு திரும்புவேன் என நம்புகிறேன். எனக்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் மிக்க நன்றி. அனைவரும் பாதுகாப்பாகவும் நலமாகவும் இருக்கவேண்டும். என்னைப் போலப் பலரது உடல் நிலையைக் கவனித்துக்கொள்ளும் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் 2011-ம் ஆண்டு உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற இந்திய அணி வீரர்களுக்கும், அனைத்து இந்தியர்களுக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

-இவ்வாறு சச்சின் தன் டிவிட்டரில் பதிந்துள்ளார்.

2011-ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி படைத்த வரலாற்று சாதனையை நினைவு கூறும் நாள் இன்று. இதுவரை நடைபெற்ற உலககோப்பை போட்டிகளில் இரண்டு முறை இந்தியா வென்றுள்ளது. மேலும் இந்திய அணி உலக கோப்பை வென்று இன்றுடன் (ஏப்ரல் 2) 10 ஆண்டுகள் நிறைவடந்துள்ளது. இதனை கொண்டாடும் வகையில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலரும் தம் சந்தோஷமான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :