• அரசியல்

நான் வெல்வேன் என்று நம்புகிறேன் தொகுதி பிரசாரத்தில் குஷ்பு!





அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவின் நட்சத்திர வேட்பாளரான குஷ்பு சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

ஆயிரம் விளக்கு தொகுதிக்குட்பட்ட சூளைமேடு பகுதியில் குஷ்பு வீடு வீடாகச் சென்று வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டபோது, மனைவிக்காக சுந்தர் சியும் தொகுதிக்குள் வலம்வந்து சுறுசுறுப்பாக பிரசாரத்தில் ஈடுபட்டார். அபோது குஷ்புவையும் சுந்தர் சி-யையும் சூழ்ந்துகொண்ட , அப்பகுதி பெண்கள் அவர்களிடம் சினிமா பற்றியும் பல கேள்விகளைக் கேட்கத் தொடங்க, சுந்தர் சி அவர்களிடம் சகஜமாக பேசி சிரிக்க வைத்தார்

வாகனங்கள் செல்ல முடியாத குறுகலான தெருக்களில் கூட கணவருடன் சேர்ந்து குஷ்பு வீடு, வீடாக நடந்து சென்று வாக்கு சேகரிக்கும்போது, அப்பகுதி மக்கள் குஷ்புவிற்கு குடிநீர், இளநீர், குளிர்பானங்களை கொடுத்து பாசத்துடன் உபசரிக்கின்றனர். அவருடன் செல்ஃபி எடுத்து மகிழ்வதற்கு குழந்தைகள் பட்டாளம் காத்துக்கிடக்கிறது. வாக்கு சேகரிக்க செல்லும் பல பகுதிகளில் பட்டாசு வெடித்தும், மலர் தூவியும் குஷ்புவிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

பிரச்சாரத்திற்கு மத்தியில் செய்தியாளர்களிடம் குஷ்பு பேசியபோது ‘’இந்த மக்களின் பாசம் என்னை நெகிழ வைக்கிறது. பாஜக மாநில தலைவருக்காகவும் பிரசாரம் செய்ய ஆசை இருந்தாலும், அவரவர் தொகுதியில் பரபரப்பாக இருக்கிறோம். தேர்தல் பிரசாரம் செய்வதற்கு எங்களூக்கு வெறும் 15 நாட்கள் மட்டும்தான் கிடைத்துள்ளது. நான் நிச்சயம் வெல்வேன் என்ற நம்பிக்கை உள்லது. என் வெற்றி ஒட்டுமொத்த பெண்களின் வெற்றியாக அமையும்’’ என்றார் மனநெகிழ்வுடன்!




Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :