• TRENDING | பர பர

சேலை கட்டி, புல்லட் ஓட்டி கலக்கிய அம்மா நடிகை! வைரல் வீடியோ!





பிரபல தமிழ் தொலைக்காட்சி சீரியலான ‘அரண்மனைக்கிளி’யில் அம்மா மீனாட்சியாக நடித்துக் கலக்கியவர் 44 வயதாகும் நடிகை பிரகதி.

அவர் சேலை உடுத்திகொண்டு புல்லட்டில் பறந்த வீடியோக் காட்சி ஒன்று தற்போது இணையத்தைக் கலக்கி வருகிறது.

தற்போது சீரியலில் நடித்து வரும் நடிகை பிரகதி, டைரக்டர் கே.பாக்யராஜின் ‘வீட்ல விசேஷங்க’ படத்தின் மூலமாகத் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் பின்னர் தமிழ், தெலுங்கு என மொத்தம் 120-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நந்தி விருது இரண்டு முறை வாங்கியுள்ள பிரகதி, திருமணத்துக்குப் பின் சீரியலில் தலைகாட்ட ஆரம்பித்தார்.

பிட்னஸில் ஆர்வம் கொண்ட பிரகதி, தன் உடற்பயிற்சி வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு கலக்கினார். மேலும் தன் மகனுடன் சேர்ந்து ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு பிரகதி ஆடிய நடனம் சமூக வலைதளங்களில் படு வைரலானது.

இந்நிலையில் இப்போது அவர் சேலை கட்டியபடி, புல்லட் ஓட்டிகொண்டு கம்பீரமாக ரோட்டில் வலம் வரும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார். தற்போது வைரலாகி வரும் அந்த வீடியோவுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.

Instagram Link : : https://www.instagram.com/p/CMRgQ-lDfOJ/

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :