• SPARKLES | மினுமினு

இசைஞானியின் புதிய ஸ்டூடியோவில் சின்ன கலைவாணர் விவேக் சந்திப்பு!


ராகவ் குமார்





தமிழ் சினிமா ரசிகர்களை தன் காமெடியால் சிரித்துக் குலுங்க வைக்கும் நடிகர் விவேக் இன்று இசைஞானி இளையராஜாவின் புதிய ஸ்டூடியோவை காண சென்றார். அப்போது இந்த இரண்டு உன்னதக் கலைஞர்களும் பரஸ்பரம் புதுமையான பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

ராஜா சாரின் ஸ்டூடியோவிற்கு சென்ற போது புத்தர் ஓவியம் ஒன்றை நடிகர் விவேக் பரிசாக வழங்கி உள்ளார். மேலும் ஒரு வீடியோவை இசைஞானிக்கு போட்டுக் காண்பித்தார். அதில் விவேக் தன் மகன் வாசித்த பியானோவில் `இதழில் கதை எழுதும் நேரமிது’ என்ற பிரபல பாடலை விவேக் வாசிக்கும் காட்சி இருந்தது. ’உன்னால் முடியும் தம்பி’ படத்தில் இளையராஜா இசையமைப்பில் வெளியாகி சூப்பர்ஹிட் ஆன பாடல் அது!

இந்த சந்திப்பு பற்றி நெகிழ்ச்சியுடன் நம்முடன் பகிர்ந்து கொண்டார் சின்னக் கலைவாணர் விவேக்.

கொரோனா காரணமாக நாடெங்கும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் போது தனது மனதுக்கு பிடித்த ராஜா சார் பாடல்களை என் மகன் வாசித்த பியானோவில் வாசிக்க பழகினேன். அதில் எனக்கு மிகவும் பிடித்தமானது ‘இந்த ‘இதழில் கதை எழுதும் நேரமிது.’ பாடல்தான்!

ராஜா சாரை மரியாதை நிமித்தமாக அவரது புதிய ஸ்டுடியோவில் சந்தித்தபோது, நான் வாசித்த அந்த பாடல் வீடியோவைப் போட்டுக் காட்டினேன். அவர் மிகவும் பாராட்டினார். எனக்கு ரொம் சந்தோஷமாக இருந்தது. அதுமட்டுமல்ல.. என்ன்னுடைய பியானோவில் பதிப்பதற்காக ராஜா சாரின் புகைப்படத்தையும் ஆட்டோகிராப்பையும் கேட்டேன்.

இசைஞானியும், உடனடியாக தன்னுடைய புகைப்படத்தில் ‘இறையருள் நிறைக’ என்று எழுதி கையெழுத்திட்டு தந்தார். அவரது கையெழுத்துடன்கூடிய அந்த புகைப்படத்தை எனது பியானோவில் விரைவில் பதித்து இசைஞானியிடம் கொண்டு செல்வேன். அவர் முன்னிலையில் லைவ்வாக அவரது பாடல் ஒன்றை அந்த பியானோவில் வாசித்துக் காட்ட வேண்டும் என்பது என் லட்சியம்’’

-இவ்வாறு நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார் விவேக்.




Comments

Anu says :

Nalla ullangalin sandippu . Nallathoru pagirvu .

Dr R Parthasarathy says :

இசைக்கு ஞானியும், சிரிப்புக்கு ஞானியும், சந்தித்து மகிழும் இந்தப்பகிர்வை, எழுத்துக்கு ஞானியான மதிப்பிற்குரிய கல்கிப் பத்திரிகை, நம்முடன் பகிர்ந்து, நம்மை மகிழ்வித்திருக்கிறது. இந்த மூன்று ஞானிகளின் சேவை மக்களுக்கு இன்னும் பல நீண்ட நாட்களுக்குத் தேவை. ஒன்று செவிக்கு உணவு, இன்னொன்று மனச்சுமைக்கு மருந்து, மற்றொன்று அறிவுக்கு விருந்து. மூன்றுமே மனதுக்கும், எண்ணங்களுக்கும், நிறைவு. சபாஷ் சந்திப்பு.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :