• TRENDING | பர பர

பத்து வருடத்துக்குப் பின் மீண்டும் அதே போஸ்: அதே மூவர்! மீண்டும் வைரலான புகைப்படம்!





கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, Distracted Boyfriend என்ற மீம் டெம்பிளேட் இணையத்தைக் கலக்கி வருகிறது.

இந்நிலையில், இந்த பிரபலமான மீமில் இடம்பெற்றிருந்த ஒரு ஆணும், இரண்டு பெண்களும் 10 வருடங்கள் கழித்து தற்போது மீண்டும் சந்தித்து, அதேபோஸில் புகைப்படம் எடுத்து அதை மீண்டும் பதிவேற்றி வைரலாக்கி உள்ளனர்.

இந்த மீமில், ஒரு காதல் ஜோடி கேஷுவலாக நடந்துகொண்டிருக்க, அப்போது சிவப்பு உடை அணிந்த பெண் அந்த ஆணைக் கடந்து செல்வார். அப்போது அந்த ஆண், தனது காதலி அருகில் இருக்கும்போதே அந்த பெண்ணை மெல்ல திரும்பி பார்ப்பார். இதுதான் அந்த புகைப்பட மீமில் தோன்றும்.

இப்படியாக இருந்த மீம்தான் 10 வருடங்களாக, பல்வேறு வடிவத்தில் சமூக வலைத்தளங்களில் பயன்படுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில், மீண்டும் 10 வருடத்துக்குப்பின், அந்த மீமில் இடம்பெற்ற மூவரும் மீண்டும் சந்தித்து அந்த மீமைப் போன்று அதே போஸில் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

அந்த புகைப்படத்தை, ஜான் ஒ கோனல் என்பவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில், இதுவரை 1.4 கோடிக்கும் அதிகமான லைக்குகளை பெற்று, இந்த போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

twitter link : : https://twitter.com/jdpoc/status/1370798098075824132




Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :