• TRENDING | பர பர

ஊதா கலரு ஊரு: சுற்றுலா மக்களைக் கவர ஒரு நகரமே ஊதா நிறமாக மாறிய சம்பவம்!





சுற்றுலாவிற்கு வரும் மக்களை கவருவதற்காக, ஒரு ஊரே ஊதா நிறமாக மாறிய சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

தென்கொரியாவின் பண்வோல் மற்றும் பக்ஜி உள்ளிட்ட தீவுகளில் இந்த சுவாரஸ்யமான சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்தத் தீவில் உள்ள வீடுகள், கார்கள், கட்டிடங்கள் என எல்லாமே ஊதா நிறமாக மாறியுள்ளது. சினிமாவில் கனவுப் பாடல் காட்சிகளில் இடம்பெறுவதுபோல் அற்புத அழகுடன் ஜொலிக்கிறது.

பெரும்பாலும் வயதானவர்கள் மட்டுமே இந்தப் பகுதியில் வசித்து வந்தாலும், இந்த ஊதா நிறத்திற்கு பெரும் வரவேற்பை தெரிவித்து பலரும் சுற்றுலாவிற்காக இங்கு வருகை தருகின்றனர். சிறுவர், பெரியவர் என சுற்றுலா வரும் அனைவரையும், பாகுபாடில்லாமல் வரவேற்று மகிழ்கின்றனர் அப்பகுதி மக்கள்.




Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :