அமெரிக்காவில் நடைபெற்ற கிராமிய விருது வழங்கும் விழாவில் கனடாவை சேர்ந்த யூடியூபரான லில்லி சிங் என்ற பெண் டெல்லியில் நடக்கும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மாஸ்க் அணிந்தது பரபரப்பாகியுள்ளது.
இந்தியாவின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த வருடம் ஆகஸ்டு மாதத்திலிருந்து பஞ்சாப், அரியானா விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் உலகளவில் அனைவர் கவனத்தையும் கவர்ந்துள்ளது. இந்தப் விவசாயிகள் போராட்டத்தில் இதுவரை சுமார் 200-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற கிராமிய விருது வழங்கும் விழாவில் கனடாவை சேர்ந்த யூடியூபர் #standwithformers என்ற வாசகம் பொறிக்கப்பட்ட முகக்கவசம் அணிந்து விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தார். அதாவது அந்த முக்கவசத்தில் ` நான் விவசாயிகளுடன் நிற்கிறேன்` என்ற வாசகம் எழுதி இருந்தது. அந்த புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு தற்போது ஹேஷ்டேக் ஆகி வைரலாக பரவி வருகிறது.
ஏற்கனவே இதைப்போன்றே அமெரிக்க பாப் பாடகி ரிஹானா விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ட்விட்டரில் பதிவிட்ட கருத்துகள் வைரலாகியது என்பது குறிப்பிடத்தக்கது.
twitter link : : https://twitter.com/Lilly/status/1371290534908633090
Comments
Ramachandran R says :
Avargalukku irukkum Ireland ingulla aatchiyalargalukku illai