• TRENDING | பர பர

என் வாக்கு விற்பனைக்கு அல்ல: வைரலாகும் பிரபுதேவாவின் தேர்தல் பாடல் வீடியோ!





தேர்தலில் வாக்களிப்பது சம்பந்தமாக மக்களிடையே விழிப்பிணர்வை ஏற்படுத்தும்விதமாக நடிகர் பிரபுதேவா பாடும் ஒரு வீடியோ பாடலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

திரைப்படத்துறையில் நடனத்தில் ஆரம்பித்து நடிப்பு, டைரக்ஷன் என பல துறைகளில் காலூன்றியவர் பிரபுதேவா. தற்போது, தமிழக தேர்தல் தொடர்பான ஒரு விளம்பரத் தூதராகவும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

அது சம்பந்தமாக அவர் பாடும் ஒரு வீடியோவில், எதற்காக வாக்களிக்க வேண்டும், நமது உரிமைகள் என்ன, என் வாக்கு விற்பனைக்கு அல்ல என்பது போன்ற பல செய்திகளை உள்ளடக்கி, அதை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

தற்போது பிரபுதேவா பாடியுள்ள தேர்தல் விழிப்புணர்வு குறித்த இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதேபோன்று, 2019ஆம் ஆண்டும் நடிகர் பிரபுதேவா நாடாளுமன்ற தேர்தலுக்காக, விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

twitter link : : https://twitter.com/ECISVEEP/status/1371447322937192451

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :