• TRENDING | பர பர

இந்திய தலாய்லாமா தோனியா!? வைரலாகும் தோனியின் புது அவதாரம்!





சமீபத்தில் தோனி மொட்டையடித்தபடி, அன்பின் வடிவாய் குழந்தைகளுக்கு பாடம் புகட்டும் தோனியாக வலம் வரும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தைக் கலக்கி வருகிறது. அந்த வீடியோவைப் பார்த்த பலரும் இந்திய தலாய்லாமா தோனி என கமெண்ட் செய்தும் பகிர்ந்து வருகின்றனர்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், விரைவில் நடக்கவுள்ள ஐபிஎல் போட்டிக்கான ஒரு புது ப்ரமோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தல தோனி தனது தோற்றத்தை முழுமையாக மாற்றி, தலையில் மொட்டை அடித்தபடி, அமைதியின் வடிவாய் குழந்தைகளுக்கு பாடம் புகட்டும்படி அந்த ப்ரமோ வீடியோ அமைந்துள்ளது.

தோனியின் இந்த புது தோற்றத்தைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போய் இந்திய தலாய்லாமா தோனி என கமெண்ட் செய்துள்ளதோடு மட்டுமில்லாமல், பலரும், அந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்தும் வருகின்றனர்.

twitter link : : https://twitter.com/RajiniDhoniFC/status/1371084735737303040

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :