• TRENDING | பர பர

காட்டுக்குள் சென்ற மருத்துவர்: பிளிறிய காட்டு யானை! வைரல் புகைப்படம்!





யானை ஒன்று, 12 வருடங்களுக்கு முன்பு தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவரைப் பார்த்ததும் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய காட்சி அனைவரையும் சிலிர்க்க வைத்துள்ளது.

தாய்லாந்து நாட்டில் கால்நடை மருத்துவராக இருப்பவர் Pattarapol Maneeon. இவர் ஒரு வேலை காரணமாக, காட்டுப்பகுதி வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென ஒரு யானை பயங்கரமாக சத்தம் போட்டது. அந்த மருத்துவர் விலங்குகளின் சத்தத்தை வைத்து எதற்கு சத்தம் போடுகிறது என்பதை உணரக்கூடியவர். அதனால் அந்த சத்தம் வரும் திசை நோக்கி சென்றுள்ளார்.

பிளிறிய அந்த யானையின் பெயர் Plai Thang (31). கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு பயங்கரமாக காயமடைந்து உயிருக்காக போராடிக்கொண்டிருநத அந்த யானைக்கு, மருத்துவர் Pattarapol Maneeon தான் சில மாதங்களாக தொடர்ந்து சிகிச்சை அளித்து, யானை குணமானதும் வனத்துறை உதவியுடன் காட்டிலும் விட்டுள்ளார்.

இந்நிலையில்தான், தற்போது மருத்துவர் வருவதை தூரத்தில் இருந்து பார்த்துவிட்ட யானை, அவரை அழைப்பதற்காக பிளிறியது.

மருத்துவரும், அந்த யானையின் அருகே செல்ல, Plai அவருக்கு வணக்கம் தெரிவிப்பதற்காக அவரை நோக்கி தன் துதிக்கையை நீட்டியுள்ளது. அதைப்புரிந்துகொண்ட மருத்துவரும் தன் கைகளை நீட்டி, அதன் அன்பை ஏற்றுக்கொண்டார்.

12 ஆண்டுகளுக்கு முன் சந்தித்த மனிதரை மறக்காமல் தன் அன்பை பரிமாறிய இந்த காட்டு யானையின் நெகிழ்ச்சியான சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Comments

Vani ganapathy says :

அருமை..மிருகங்கள் மனிதனை விட மேலானது என்பதை உணர்த்திய விதம் சிறப்பு..தக்க தருணத்தில் செய்த உதவியை மறவாது நினை‌வி‌ல் வைத்து நன்றி தெரிவித்த விதம் மனம் நெகிழ வைத்தது...

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :