• TRENDING | பர பர

காட்டுத் தீக்கிடையே நடனமாடிய வனத்துறை அதிகாரி!





கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீக்கு இடையே, திடீரென மழை பெய்ததால் சந்தோஷத்தில் நடனமாடி மகிழ்ந்த வனத்துறை அதிகாரியின் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஒடிசா மாநிலத்தில் சிம்லிபால் வனவிலங்கு காப்பகப் பகுதி அமைந்துள்ளது. இங்கு கடந்த இரண்டு வாரமாக காட்டுத் தீ பரவி வருகிறது. இந்நிலையில் அம்மாநில அரசு இந்த காட்டுத் தீ தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அங்கிருக்கும் விலங்குகளுக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படவில்லை எனவும் கூறியிருந்தது.

இச்சூழ்நிலையில்தான், காட்டுத் தீயின் கோரத்தாண்டவத்தை கட்டுப்படுத்தும் விதமாக அப்பகுதியில் மழையும் பெய்தது. இதனால் உற்சாகமடைந்த வன காவலர் சினேகா தால் கடவுளுக்கு நன்றி செலுத்தி உற்சாகமாக நடனமாடி உள்ளார். தற்போது இதுசம்பந்தமான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

twitter link : : https://twitter.com/ykmohanta/status/1369642199357386760

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :