• SPARKLES | மினுமினு

லாஜிக் இல்லாத மேஜிக்.. ‘டெடி’ விமர்சனம்!


ராகவ் குமார்





தமிழ் சினிமாவில் பேய்க் கதை சஸ்பென்ஸ், திர்ல்லருடன் இருந்தால் பெரும் வரவேற்பு கிடைக்கும். அதேபோல டெடி படமும் நம்மை சீட் நுனிக்கு வரச் செய்கிறது.

பொதுவாக இதுபோன்ற பேய் கதைகளில் கொலை செய்யப்படும் உயிர், ஒரு பொம்மைக்குள் புகுந்து தன்னை கொன்றவர்களை பழி வாங்கும். டெடி படத்திலும் அப்படியே! அதிலும், வயது வித்தியாசமின்றி நம் அனைவருக்கும் பிடித்த ஒரு டெடி கரடி பொம்மைக்குள் உயிர் புகுந்து எதிரிகளை பழி வாங்குகிறது.

படத்தின் டைரக்டர் சக்தி சௌந்தர் ராஜன் கொஞ்சம் வித்தியாசமாக சிந்தித்திருக்கிறார். அதாவது, படத்தில் கொலை செய்யப்படும் கேரக்டரின் உயிர் போகாமல், நினைவுகள் மட்டும் மறந்து கோமா ஸ்டேஜூக்கு போய்விட்டதாகக் காட்டியுள்ளார். நிஜ ஜோடொயான ஆர்யா-சாய்ஷா ஜோடி திரையிலும் ஜோடி சேர வேண்டும் என்பதற்காக லாஜிக்கை கொஞ்சம் மாற்றி இருப்பாரோ என்று தோன்றுகிறது.

கல்லுரியில் சுற்றுலா செல்லும் சாய்ஷா ஒரு விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அங்கே அவரது நினைவுகள் வலுக்கட்டாயமாக பறிக்க படுகிறது.சாய்ஷாவின் நினைவுகள் டெடி பொம்மைக்குள் சென்று விடுகிறது. அந்த பொம்மை ஆர்யாவை தேடிப் பிடித்து தன்னுடைய கதையை சொல்லுகிறது. இதை அடிப்படையாக கொண்டு சாய்ஷாவின் இந்த நிலைமைக்கு காரணத்தை ஆராய்ச்சி செய்கிறார் ஆர்யா! அதன்படி சாய்ஷா கொலை செய்யப் படவில்லை என்பதும் உடல் உறுப்புகளைத் திருடும் கோஷ்டியால் அவர் கடத்தி செல்லப்பட்டுள்ளார் என்றும் தெரிய வருகிறது.

சாய்ஷாவின் உடலை ஆர்யா மீட்டாரா? பொம்மையின் உடலில் உள்ள நினைவுகள் சாய்ஷா உடலுக்கு மீண்டும் வந்ததா என்பதை காமெடி, காதல், அடிதடி என கலந்து சொல்லி இருக்கிறார் இயக்குனர். நிறைய நடிகர்கள் இருந்தாலும் நடிப்பில் ஸ்கோர் செய்வது டெடி பொம்மைதான்.

ஏமாற்றம், சோகம், காதல் என கண்களை உருட்டி உணர்வுகளை காட்டுகிறது. இதை அழகாக படம் பிடித்து உள்ளார் டைரக்டர். படத்தில் லாஜிக் உதைக்கும் போது டெடிதான் அதையெல்லாம் மறக்க வைக்கிறது. கருணாகரன், சதிஷ் என இரண்டு காமெடி நடிகர்கள் இருந்தும் டெடி செய்யும் காமெடி நம்மை சிரிக்க வைக்கிறது. அழுத்தம் அமைதி நிறைந்த ஆர்யா. ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பு. சாய்ஷாவிற்கு நடிப்பை வெளிபடுத்த வாய்ப்பு குறைவாகவே உள்ளது.

தமிழ் சினிமாவில் ஹை டெக் வில்லன் ரெடி. இமான் இசையில் ’’என் இனிய தனிமை’’ பாடல் சிறப்பு. லாஜிக் பற்றி கவலை இல்லாமல் இருந்தால் டெடியை ரசிக்கலாம். டெடி - சுட்டி.




Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :