• TRENDING | பர பர

பத்திரிகையாளர் முகத்தில் கிருமிநாசினி தெளித்த தாய்லாந்து பிரதமர்! வைரல் வீடியோ!





பத்திரிகையாளர் சந்திப்பில், கடினமான கேள்வியைக் கேட்டதால், ஆத்திரமுற்ற தாய்லாந்து பிரதமர், பத்திரிகையாளர்களின் முகத்தில் கிருமிநாசினி தெளித்த சம்பவம் வீடியோவாக வைரலாகி வருகிறது.

நேற்று முன்தினம், தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓச்சா தலைநகர் பாங்காக்கில் பத்திரிகையாளர் சந்திப்பில் ஈடுபட்டார். அப்போது, 3 அமைச்சர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது தொடர்பாக பத்திரிகையாளர்கள் கேள்வியை எழுப்பினர்.

இதனால் ஆத்திரமடைந்த அதிபர், பதிலளிக்காமல் தனது கையிலிருந்த கிருமிநாசினியை பத்திரிகையாளர்கள் முகத்தில் ஸ்ப்ரே செய்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தார். இச்சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Youtube link : : https://www.youtube.com/watch?v=vCYx-v96j4Q

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :