• TRENDING | பர பர

சீன ஆன்லைன் தளத்தில் விற்பனையில் கலக்கும் `புத்தர் தோற்றத்தில் டிரம்ப் சிலை`!





அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப், புத்தரைப் போல பத்மாசனத்தில் அமர்ந்திருக்கும் சிலை சீனாவில் விற்பனையில் களைகட்டியுள்ளது.

டிரம்ப் அமெரிக்க அதிபராக இருந்தபோது, அவர் தலைப்புச் செய்திகளில் அடிக்கடி இடம்பெற்று வந்தார். ஆனால், தற்போது நடந்த தேர்தல் தோல்விக்குப் பின் அவரைப் பற்றிய செய்திகள் பெரிதாக பேசப்படாத நிலையில், சீனர் ஒருவர், டிரம்பின் உருவ பொம்மையை வித்தியாசமாக வடிவமைத்து, அவரை மீண்டும் அனைவரும் பேசும்படி வைத்துள்ளார்.

அதாவது, டிரம்ப் அமைதியாக புத்தரைப்போன்று அமர்ந்து ஆழ்ந்த தியானத்தில் இருப்பதுபோல் ஒரு பொம்மையை உருவாக்கி, அதை தபோவா (Taobao) என்ற ஆன்லைன் தளம் மூலம் விற்பனை செய்து வருகிறார். 4.6 மீட்டர் இருக்கும் இந்த பொம்மையை, இந்திய ரூபாயில் 44,707 ரூபாய்க்கு விற்பனை செய்வதாக குறிப்பிட்டுள்ள அந்த கலைஞர், இதுவரை நூற்றுக்கும் அதிகமான பொம்மைகளை உருவாக்கி விற்பனை செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சியாமின் பகுதியில் வசித்து வரும் அவர், டிரம்பின் உறுதிமொழியான Make America Great Again என்ற வார்த்தைகளை வர்த்தகத்துக்கு பயன்படுத்த விரும்பிய அவர், Make your company great again என்ற வாசகத்துடன் அவரின் சிலையை உருவாக்கியதாகவும் கூறியுள்ளார்.

டிரம்ப் புத்தா சிலை குறித்து பேசியவர், தங்களுடைய மகிழ்ச்சிக்காக பலரும் இந்த சிலையை விரும்பி வாங்கி வருவதாகவும், டிரம்ப் புத்தா சிலைகள் குறைந்தபட்ச விலை 11,168 ரூபாயில் இருந்து 44 ஆயிரம் ரூபாய் வரை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :