• TRENDING | பர பர

படகுக்குள் பாய்ந்த பெங்குவின்!





அன்டார்டிகாவில் சுற்றுலா பயணிகள் ஒரு போட்டில் பயணம் செய்யும்போது, நடுக்கடலிலிருந்து ஒரு பெங்குவின் தத்தி தத்தி பறந்து வந்து படகுக்குள் தாவியது.

கடலில் தன்னை பிடித்து இரையாக்க துரத்திய திமிங்கலத்திடமிருந்து தப்பிக்க, இப்படி பெங்குவின் தங்கள் படகில் தஞ்சமடைந்தது, அதிலிருந்த பயணிகளுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.

இதை அந்த போட்டில் பயணித்த மேட் கார்ஸ்டன் என்பவர் வீடியோ எடுத்து தன் பிளாகில் போட. இது வைரலாகியது.

இது குறித்து மேட் கார்ஸ்டன் கூறியதாவது:

"அன்டார்டிகா கடலில் நாங்கள் படகில் போகும் போது, இப்படி ஜென்ட்டூ ரக பெங்குவின் திடீரென்று படகுக்குள் பாய்ந்தது. எங்களுக்கு செம திரில்லிங் அனுபவம். நேஷனல் ஜாக்ரபி சேனல் காட்சி ஒன்றை நேரில் பார்ப்பது மாதிரி இருந்தது " என்கிறார்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :