• TRENDING | பர பர

அணிலு… அணிலு… என மாணவனை கலாய்க்கும் நெட்டிசன்கள்! அப்படி என்னதான் செய்தான்?





தற்போது விஜய்யின் நடிப்பில் வெளியாகி ஹிட்டான திரைப்படம் `மாஸ்டர்`. லோகேஷ் கனகராஜ் இயக்க, இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

இந்நிலையில், ஒரு பள்ளியின் தேர்வுத்தாளில் , ‘தியேட்டருக்கு சென்று படம் பார்த்த அனுபவத்தைப் பற்றி எழுதுக’ என்ற கேள்விக்கு, ஒரு ஆறாம் வகுப்பு மாணவனோ ‘மாஸ்டர்’ திரைப்படம் பார்த்ததை பற்றி எழுதியுள்ளார்.

அந்த தேர்வுத் தாளில், ‘நான் தியேட்டருக்கு சென்று பார்த்த முதல் திரைப்படம் ‘மாஸ்டர்’. அதில் இடம்பெற்ற ‘வாத்தி கம்மிங்’ என்ற பாடல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. குற்றங்கள் பல செய்யும் சிறுவயது மாணவர்களை எப்படி அதிலிருந்து மீட்டெடுக்கிறார் என்பதுதான் கதை’ என அருமையாக விளக்கி எழுதியுள்ளார்.

தற்போது அந்த மாணவன் எழுதிய தேர்வுத்தாள் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருவதோடு, இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் அந்த மாணவனை அணிலு… என்று கூறி கிண்டலாக கமெண்ட் செய்து வருகின்றனர்.




Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :