• TRENDING | பர பர

அனல் கக்கும் லாவா எரிமலைக் குழம்பைக் கடந்து சாதனை படைத்த பெண்! வைரல் வீடியோ!





எரிமலை வெடித்துச் சிதறி தீப்பிழம்பும், வெப்பமும் நிரம்பி வழியும் லாவா ஏரியை கடந்து சாதனை படைத்துள்ளார் ஒரு பெண். தற்போது அதுசம்பந்தமான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

எத்தியோப்பியா நாட்டின் Afar பகுதியில் Erta Ale என்ற தீயைக் கக்கும் எரிமலை அமைந்துள்ளது. அருகில் செல்லமுடியாத அளவுக்கு வெப்பமும், தீக்குழம்பும் நிரம்பி வழியும் அந்த லாவா ஏரியை மிகவும் துணிச்சலுடன் பிரேசில் நாட்டை சேர்ந்த கரினா ஒலியோனி என்ற பெண் கடந்து சாதனை படைத்துள்ளார்.

இயற்கை என்றாலே கொள்ளை இஷ்டமாம் 38 வயதான கரினாவுக்கு. அதனால்தான் என்னவோ, இயற்கையுடன் ஒன்றிணைந்து கடலுக்கடியில் சுறாவுடன் ஆராய்ச்சி, பனிமலை ஏறுவது என பல்வேறு சாகசங்களையும் செய்துள்ளார்.

இந்நிலையில் சுமார் 100 மீட்டர் உள்ள லாவா ஏரியை கயிற்றின் மூலம் கடந்து உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார் கரினா. இந்த ஏரியைக் கடக்கும்போது, வெப்பம் சுமார் 1187 டிகிரி செல்ஷியசில் இருந்ததாம்.

இதுபற்றி அவர் கூறுகையில், ‘மிகப்பெரிய லாவா ஏரியைக் கடப்பதைவிட இந்த பூமியில் வேறென்ன பெரிய சவால் இருக்கிறது?’ என கூலாக சொல்கிறார் கரினா.

Youtube link : : https://www.youtube.com/watch?v=Gd1DVs63z10

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :