• TRENDING | பர பர

ஸ்பா ஒன்றில் அழகு சிகிச்சை எடுத்துகொண்ட சுட்டிப் பூனை! கலக்கல் வீடியோ!





அமெரிக்காவில் பூனை ஒன்று தன் உரிமையாளருடன் சேர்ந்து ஸ்பாவில் அழகு சிகிச்சை எடுத்துக்கொண்ட வீடியோ இணையத்தைக் கலக்கி வருகிறது.

கலிபோர்னியா நாட்டைச் சேர்ந்தவர்கள் கரீம் மற்றும் ஃபிஃபி. இவர்கள் இருவரும் சேஸ் (chase) என்ற பூனையை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில், கரீம் தனக்கு ஸ்பா எடுப்பதற்காக படுத்துக்கொள்ள, அவருடன் சேர்ந்து அந்த சுட்டிப் பூனையும் கண்களுக்கு குளிர்ச்சியாய் வெள்ளரித் துண்டுகளை இரு கண்களிலும் வைத்துக்கொண்டு அவருக்கருகே ஹாயாக படுத்திருக்கிறது. அறையினுள் நுழைந்த ஃபிஃபி, பூனையை பார்த்து ஆச்சரியப்பட்டு, ’’இது என்ன கோலம்?’’ என்றுகூறி, வா போகலாம் என பூனையை அழைக்கிறார்.

அது அசைந்தபாடில்லை. உடனே அதன் கண்களில் இருக்கின்ற வெள்ளரித் துண்டுகளை எடுக்கிறார். அதனால் கோபமடைந்த பூனை அவரது கைகளைக் கடிக்கிறது. அது எழுந்து வராததால், அதன் கண்களில் மீண்டும் வெள்ளரித் துண்டுகளை வைக்க, அமைதியாக படுத்துக் கொள்கிறது.

தற்போது இது சம்பந்தமான வீடியோ ஒன்று இணையத்தைக் கலக்கி வருகிறது.

twitter link : : https://twitter.com/_Glintofsilver/status/1366204627922923521

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :