• GLITTERS | பளபள

ஹரித்வாரில் மகா கும்பமேளா: மகாசிவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம்!





உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா கும்பமேளா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். அந்த வகையில் தற்போது ஏப்ரல் 1-ம் தேதி துவங்கி 30-ம் தேதிவரை மகா கும்பமேளா விமரிசையாக நடைபெறவுள்ளது.

உலக பிரசித்தி பெற்ற ஹரித்வார் கும்பமேளா பொதுவாக 4 மாதங்கள் வரை நடைபெறும் ஆனால் இந்த அண்டு கொரோனா பரவல் காரணமாக இந்த விழா, 30 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஏப்ரல் 30-ம் தேதி வரை ஹரித்வார் மகா கும்பமேளா நடைபெறும் என்று உத்தரகண்ட் அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் பிரயாக்ராஜ் (அலகாபாத்), ஹரித்வார், உஜ்ஜைன் மற்றும் நாசிக் ஆகிய 4 ஊர்களில் ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கும் ஒரு முறை கும்பமேளா நடைபெறுவது வழக்கம். இந்துக்களின் புனித நிகழ்வான இந்த கும்பமேளாவில் உலகம் முழுவதிலும் இருந்து சாதுக்கள், பொதுமக்கள் என கோடிக்கணக்கானவர்கள் வந்து கலந்து கொள்வார்கள். கங்கையில் புனித நீராடுவர்.

அந்த வகையில் இந்த வருடம் ஹரித்வார் மகா கும்பமேளாவில் பங்கேற்க வரும் பக்தர்களுக்கு கொரோனா விதிமுறைகளை பின்பற்றி முகக்கவசம் அணிதல் போன்றவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அத்துடன் விழாவுக்கு வரும் போது கொரோனா நெகட்டிவ் சான்றிதழும் அவசியமாக எடுத்துவர வேண்டும் என்றும் இந்த சான்றிதழ் 72 மணி நேரங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. உத்தரகண்ட் மாநிலத்துக்கு பொருளாதார ரீதியிலும் மகா கும்பமேளா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். அதனால் வழக்கமாக நான்கு மாதங்கள் வரை கும்பமேளா நிகழ்ச்சிகள் நீடிக்கும். ஆனால், இந்தமுறை கொரோனா தாக்கம் காரணமாக 4 மாதங்களுக்கு பதிலாக 30 நாட்களாக இந்த விழா குறைக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் கும்பமேளாவானது இம்முறை 11 ஆண்டுகளுக்குப் பின் நடத்தப்படுகிறது. கடைசியாக கடந்த 2010 ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி முதல் ஏப்ரல் 28ம் தேதி வரை ஹரித்வாரில் கும்பமேளா கொண்டாடப்பட்டது.

கும்பமேளா விழா கொண்டாடப்படும் நிலையில் அதற்கான ஏற்பாடுகளை மாநில அரசு துரிதப்படுத்தியுள்ளது. கங்கை நதிக்கரையில் பொதுமக்கள் நடந்து செல்வதற்காக ஆற்றின் மீது புதிய நடைபாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் பழைய பாலங்களும் வண்ணம் தீட்டப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது. கும்பமேளாவில் சாதாரண நாட்களில் 10 லட்சம் பேரும், முக்கிய நாட்களில் 50 லட்சம் பேரும் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கும்பமேளாவில் கலந்து கொள்பவர்கள் haridwarkumbhmela2021.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்கள் சுயவிவரங்களை குறிப்பிட்டு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். RT-PCR பரிசோதனை நெகட்டிவ் அறிக்கைகளை சமர்ப்பித்து விழாவில் கலந்துகொள்வதற்கான பாஸ்-களை பக்தர்கள் பெற்றுக் கொள்ளலாம். பாஸ் இல்லாதவர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளை மகாசிவராத்திரி தினத்தையொட்டி கங்கையில் நீராடுவதற்காக திரளான மக்கள் ஹரித்வாரில் வந்து குவிந்துள்ளனர். இதையொட்டி ஹரித்வார் விழாக்கோலம் பூண்டுள்ளது.




Comments

G.Ravindran says :

Aptly-timed article. Kumbh Mela is the largest congregation of pilgrims at one place anywhere in the world. Last time the Kumbh Mela was organized in an extremely efficient manner with excellent facilities for the devotees and hopefully things would be as good this time, if not better, despite the pandemic. It`s believed what was called Magh Mela centuries ago transformed into Kumbh Mela around the Middle of the nineteenth century. Magham or Mahamagham held once in twelve years at Kumbakonam probably has its origins in Magh Mela

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :