• TRENDING | பர பர

தங்கப் புதையல் தேடி மலையில் குவிந்த மக்கள் கூட்டம்: வைரல் வீடியோ!





காங்கோ நாட்டில் ஒரு மலையில் எக்கசக்கமாக தங்கம் புதைந்து கிடப்பதை அறிந்து ஏராளமான மக்கள் அதை தோண்டி எடுத்த வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

மத்திய ஆப்பிரிக்காவின் காங்கோ நாட்டில் தெற்கு கிவ் மாகாணத்தில்தான், ஒரு மலையில் எக்கசக்கமாக தங்கம் இருப்பதாக தகவல் வெளியாகியது. அந்த மலையில் காணப்படும் மண்ணில் கிட்டத்தட்ட, 60 முதல் 90 சதவீதம் வரையிலும் தங்கம் புதைந்திருப்பதைக் கேள்விப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள், கடப்பாரை, மண்வெட்டி என தங்கத்தைத் தோண்டியெடுக்க கையில் கிடைத்த ஆயுதங்கள் மற்றும் சட்டி, பானை போன்ற பாத்திரங்கள் சகிதம் படையெடுத்து வந்து கற்கள், மணல் என தம்மால் முடிந்தவரை அனைத்தையும் அள்ளி வீட்டுக்கு எடுத்து சென்றுள்ளனர்.

விவரம் அறிந்து வந்த அரசு அதிகாரிகள், மக்களை அப்பகுதியிலுருந்து கலைத்து, தங்க சுரங்கத்தை தோண்டுவதற்கு தடை விதித்தனர்.

கிடைத்தவரை லாபம் என பலரும் எடுத்துச் சென்ற வேளையில், தாமதமாக வந்த மக்கள் பலரும் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். இதுதொடர்பான வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

twitter link : : https://twitter.com/AhmadAlgohbary/status/1366803747062624261

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :