கொரோனாவினால், உலகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட சூழ்நிலையில், கடந்த ஒரு வருடமாக பள்ளி, கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் தொழில் நிறுவனங்கள் தொடர்பான வேலைகள் என எல்லாமே ஆன்லைன் வழியாகவே நடைபெற்று வருகிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஆன்லைன் மூலமாக வேலை குறித்தோ, படிப்பு குறித்தோ தொடர்பில் இருக்கும்போது, யாரும் எதிர்பார்க்காத வகையில் சில விசித்திரமான சம்பவங்களும் அரங்கேறி வருவது வாடிக்கையாகிவிட்டது. அந்த வகையில் பாட்னாவில் உள்ள ஹத்ரஷால் ராஜ் என்ற வழக்கறிஞர் ஆன்லைன் மூலம் நடந்த விசாரணையில் கலந்துகொண்டபோது நடைபெற்ற ஒரு சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.
அந்த ஆன்லைன் விசாரணையில், மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் ஹர்ஷத் மேத்தாவும் ஆன்லைனில் இருந்துள்ளார். இந்த விசாரணையின் போது, ஆன்லைன் வீடியோ கால் அழைப்பு துண்டிக்கப்பட்டு விட்டதாக நினைத்த ஹத்ரஷால், கேமராவை வைத்துக் கொண்டே சாப்பிட்டு கொண்டிருந்துள்ளார்.
இதை அறிந்துகொண்ட ஹர்ஷத் மேத்தா கைகாட்டி அவரை அழைத்துள்ளார். ஆனால் அழைப்பை மீயூட் செய்து வைத்துவிட்டு, சாப்பாட்டில் கவனத்துடன் இருந்ததால் ஹத்ரஷால் இதை உணரவில்லை. ஹர்ஷத் மேத்தா உடனே தொலைபேசி மூலம் பேசி, கேமரா ஆனில் இருப்பதை கூறியதைத் தொடர்ந்து உஷாரான ஹத்ரஷால், உடனடியாக சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, தட்டை கீழே வைத்துவிட்டு மீண்டும் ஆன்லைனில் வழக்கைத் தொடர்ந்தார்.
இந்த விஷயத்தை ஒரு நகைச்சுவை உணர்வுடன் பார்த்த மேத்தா, தனக்கும் பார்சல் அனுப்புமாறு நகைச்சுவையாக கூறியுள்ளார். தற்போது இதுகுறித்த வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
twitter link : : https://twitter.com/mayursejpal/status/1367711431152394243
Comments
கேஆர்எஸ் சம்பத் says :
சில சமயங்களில் அறியாமல் ஏற்பட்டு விடுவது நிஜம் . இருப்பினும் சம்பவத்தை பெரிது படுத்தாமல் கலகலப்போடு கையாண்ட அரசின் சொலிஸிட்டர் அவர்களை பாராட்டவேண்டும்.