• TRENDING | பர பர

பும்ரா திருமணம் செய்யப்போகும் பெண் யார் தெரியுமா? இதோ.. இவர்தான்!





இந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்ப்ரீத் பும்ராவுக்கும், நடிகை அனுபமா பரமேஸ்வரனுக்கும் திருமணம் என்ற செய்தி உலவிவந்த நிலையில், அவர் சஞ்சனா கணேசன் என்பவரை திருமணம் செய்துகொள்ளப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்களுடைய திருமணம் கோவாவில் விரைவில் நடைபெறப் போகிறதாம்.

சமீபத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து கிரிக்கெட் வீரர் ஜஸ்ப்ரீத் பும்ரா விலகினார். அப்போது அவர் பிசிசிஐயிடம் தனக்கு திருமணம் நடக்கவிருப்பதாக கூறியுள்ளார். அதேவேளையில், ‘எனக்கு ஹாலிடே’ என்று நடிகை அனுபமா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் பதிவிட்டார்.

இந்நிலையில், இதைக்கண்ட இவர்களது ஃபாலோவர்கள் பும்ராவுக்கும், அனுபமா பரமேஸ்வரனுக்கும் தான் திருமணம் என்று பேசத் துவங்கி, இந்த செய்தி வைரலானது. ஆனால் இதுபற்றி, பும்ரா கண்டுகொள்ளவே இல்லை.

ஏற்கெனவே பும்ராவுக்கும், அனுபமாவுக்கும் இடையே காதல் என்று சமூகவலைதளங்களில் கிசுகிசுக்கப்பட்ட நிலையில் திருமண பேச்சும் அடிபடவே, அனுபமாவின் அம்மா இதை மறுத்தார். ஒரு மலையாள ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், என் மகளுக்கும், பும்ராவுக்கும் திருமணம் என்று வெளியான தகவல் முற்றிலும் வதந்தி. அனுபமா தற்போது குஜராத்தில் படப்பிடிப்பில் இருக்கிறார் என்று குறிப்பிட்டிருந்தார்.

அனுபமா, பும்ரா இருவரும் காதலிக்கிறார்கள் என்று கிசுகிசுக்கப்பட காரணம் என்னவென்றால், இன்ஸ்டாகிராமில் பும்ராவை பின்தொடரும் ஒரே தென்னிந்திய நடிகை அனுபமா தான். அதிலும் அனுபமா போட்ட சில ட்வீட்டுகள் பும்ராவின் ட்வீட்டுகளுக்கு பதில் அளிப்பதாகவும் அமைந்ததுதான் இந்த காதல் வதந்திக்கு காரணமாக அமைந்தது.

இந்நிலையில்தான் பும்ரா விரைவில் சஞ்சனா கணேசன் என்பவரை திருமணம் செய்யவிருக்கிறார் என்ற செய்தி தற்போது வெளியாகி உள்ளது. கடந்த 2014ம் ஆண்டு மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொண்டு பைனலிஸ்டானதோடு, விளையாட்டு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் சஞ்சனா கணேசன்.

இந்நிலையில், வருகின்ற 14 அல்லது 15-ம் தேதிகளில் இவருக்கும், பும்ராவுக்கும் கோவாவில் திருமணம் நடக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.




Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :