• TRENDING | பர பர

ஜெயம் ரவி மனைவியுடன் மல்லுக்கட்டிய தனுஷ்! வைரலாகும் புகைப்படம்!





ஜெயம் ரவியின் மனைவியுடன் தனுஷ் குடிபோதையில் சண்டை போடுவது போல் அமைந்துள்ள இரண்டு புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் குடிபோதையில் தனுஷ் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தியுடன் சண்டை போடுவது போன்று ஒரு புகைப்படமும், அந்த சமயம் ஜெயம் ரவி அந்த இடத்தை விட்டு நகர்வது போன்று ஒரு புகைப்படமும் இருக்கிறது. மேலும் அந்த புகைப்படத்தில் தனுஷின் தோழியான த்ரிஷாவும் உடன் இருக்கிறார்.

இந்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பார்த்தவர்கள்தான் இப்போது தனுஷை விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், தனுஷ் மற்றும் ஆர்த்தி இருவரும், சில ஆண்டுகளுக்கு முன்பு சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை, ஜெயம் ரவி ட்விட்டரில் சகோதரன், சகோதரி என்று குறிப்பிட்டு வெளியிட்ட ட்வீட்டை எப்படியோ கண்டுபிடித்து, அதனுடன் இந்த புகைப்படத்தையும் சேர்த்து, பாசத்தில் துவங்கி தற்போது சண்டை வரை இந்த உறவு வந்திருக்கிறது என்று மீம்ஸ்களையும் போட்டு வருகிறார்கள்.

தனுஷ் ரசிகர்களை கேட்கவா வேண்டும். எப்போதோ நடந்த விஷயத்தை, எதற்காக இப்போது விமர்சிக்கிறீர்கள். உங்களுக்கு வேறு வேலையே இல்லையா எனவும் கேட்டு வருகின்றனர்.

இதற்கு முன்னர் ஒருமுறை, பார்ட்டியின்போது, தனுஷ் மற்றும் அவரின் நண்பர்கள் தாக்கியதில் காயம் அடைந்ததாகக் கூறி புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டார் பாடகி சுசித்ரா.

அதன் பிறகு சுசிலீக்ஸ் என்கிற பெயரில், பல புகைப்படங்களை அவர் வெளியிட்ட நிலையில், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது வெளியாகி உள்ள இந்த புகைப்படங்கள் குறித்து தனுஷோ, ஜெயம் ரவியோ இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.

தனுஷ், தற்போது ‘தி கிரே மேன்’ ஹாலிவுட் படத்தில் நடித்து வருவதால், தன் குடும்பத்துடன் அமெரிக்காவில் இருந்து வருகிறார். அங்கு இருந்தாலும், ட்விட்டரில் அவ்வப்போது ஆக்டிவாகவும் இருக்கிறார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘ஜகமே தந்திரம்’ படம் ஓடிடியில் வெளியாகவுள்ள நிலையில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘கர்ணன்’ படம் ஏப்ரல் மாதம் 9ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

twitter link : : https://twitter.com/CableRajaa/status/1369116182335295493

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :